இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
66
'அவள் பாட்டன் மலாகி...!
211
"பாட்டனும் இங்கேயே இருக்கட்டும். தள்ளாத வயதில் அந்தக் காட்டு வீட்டிலிருப்பானேன்?'
"பாசி சேகரிக்கும் வேலை..."
திருவாட்டிஃகன்லிஃவ் சிரித்தாள்.
"நீ வேண்டுமானால் செய். மாலிக்கு அது வேண்டாம்."
“மாலி என்ன சொல்லுவாள்!”
“அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.”
திரு. ஃகன்லிஃவ் ஏற்கனவே மலாகியிடம் பேசி எல்லாம் ஒழுங்கு படுத்தியிருந்தான். காட்டு வீட்டில் ஃகன்லிஃவ் குடும்பத்தினர் ஒரு சிறு கோடைகாலக் குடிசை கட்டினர். மாலியும் மலாகியும் ஃகன்லிஃவ் மாளிகைக்கு வந்துவிட்டனர்.
மாலி, ஃகன்லிஃவ் குடியின் மருமகளானாள். அவ்வப்போது மாலியும் ஃபார்ட்டியும் தங்கள் பாறைக் குடிசையில் தங்கிக் கடலில் மலாகி கடலை நோக்கித் தம் முற்காலச் சந்திப்புக் கனவுகளில் கருத்துச் செலுத்தி மகிழ்வார்கள்.