உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(236) ||

முடியும்?

அப்பாத்துரையம் - 36

செம்படவன் மனைவி: அஃதெப்படி உறுதியாகக் கூற

செம்படவன்: இதைவிட உயர்ந்தபடி வேறு கிடையாதே!

செம்படவன் மனைவி: கிடையாதா? பேரரசனுக்கு முடி சூட்டியது யார்?

செம்படவன்: வேறு யார்? குருமார்தான்.

செம்படவன் மனைவி: அல்ல, உலக குரு.

செம்படவன்: அதனாலென்ன?

செம்படவன் மனைவி: முடி சூட்டப்பெறுபவரைவிடச் சூட்டுபவர் உயர்வுடையவர் அல்லவா?

செம்படவன்: அஃதெப்படி? நீ சொல்வது உண்மை யானால், மன்னருக்கு முடிசூட்டும் குருமார் அவரைவிட உயர்ந்தவர்களாக வேண்டுமே?

செம்படவன் மனைவி: இல்லை. மன்னருக்குமேல் மன்னர் மன்னன் ஒருவன் உண்டு. மன்னர் மன்னருக்கு முடிசூட்டும் உலக குருவின் ஆட்களாகவே மற்ற குருமார் மன்னனுக்கு முடிசூட்டுகின்றனர். ஆகவே குருமார் மன்னருக்கு முடி சூட்டினாலும் அவர்கள் நேரடியாக மன்னனுக்கு மேற்பட்ட உரிமை உடையவரல்ல. மன்னனுக்கும் மன்னனுக்கு மேற்பட்ட மன்னர் மன்னனுக்கும் உயர்ந்த உலக குருவின் பெயரால்தான் அவர்கள் அத்தகைய உரிமையுடையவர்கள். செம்படவப் பேரரசன் மனைவியின் வாத எதிர்வாதத் திறனைக்கண்டு வியந்தான்.

செம்படவன்: இது எல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?

செம்படவன் மனைவி: நம்மைவிடத் தாம் உயர்ந்தவர் என்பதை இந்த வாதங்களால் உலககுரு என்முன் நிலைநாட்டப் பார்த்தார்.

செம்படவன்: நீ அதை ஒத்துக்கொண்டாயா?

செம்படவன் மனைவி: ஆம், ஒத்துக்கொண்டதால்தான், 'இனி மன்னர் மன்னராக நாம் இருந்தால் போதாது; உலக