உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

[237

குருவாக வேண்டும்' என்று திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் நாளையே போய் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பேரரசன் பெருமூச்சுவிட்டான். ஆனால், வேறு வகையின்றிப் புறப்பட்டுக் கடற்கரை சென்றான். கடல் முழுவதும் இப்போது செக்கச்செவேலென்று குருதி று நிறமாயிருந்தது. புயலும் மின்னலும் இடியும் அதன் பரப்பைத் துளைத்துக் கிழித்தன. அவன் கரையில் நின்றவாறே,

கடல் இளவரசே, கவனித் தருள்வாய்! அடம் பிடிக்கின்றாள்

ஆலிசு என் மனையாள்-மேலும் திடங்கொண் டொருவரம் தேடுவாய் என்றே!”

என்று இறைஞ்சினான்.

“சரி, இன்னும் உன் மனைவிக்கு என்ன வேண்டுமாம்?” என்று கேட்டது மீன். “அவள் உலக குருவாக விரும்புகிறாள்.” "இப்போதே உலக குருவாய் விட்டாள், போ!”

பாட்டுகளுடன் செம்படவன் இப்போது வரவேற்கப் பட்டான். அவன் செல்லுமிடமெல்லாம் மணிக்கம்பளமும் பொன்னுடையும் விரிக்கப்பட்டன. வெள்ளி பொன் மலர்கள் அவன்மீது தூவப்பட்டன.

பிறர் இருக்கைகளுக்கு மேற்படி இருபதடி உயரத்துக்கு மேல் பொன் மேனி அரியிருக்கையில் வீற்றிருந்தாள் செம்படவப் பெண்டு. வழக்கம் போலச் செம்படவனுக்கும் இணையிருக்கை இருந்தது.

செம்படவன் ஒரு நீண்ட மூச்சு வாங்கினான். இனி மனைவிக்கு நாம் தூதுபோக வேண்டியிராது என்று எண்ணினான். ஆனால், அவன் எண்ணியது தவறாயிற்று. 'மன்னர் என் சொற்படி நடக்கின்றனர். மன்னர் மன்னன் நம் விருப்பமறியக் காத்திருக்கிறான். மன்னுயிரெல்லாம் நம் ஆணைக்குள் இருக்கின்றன. நாம் கடவுளின் ஆட்பேர். ஆனால், இன்னும் கடவுளின் ஆற்றல் நமக்கு முழுதும் வரவில்லை.கடலும்,