35. உப்பின் சுவை
துருக்கி நாட்டுக் கதை
66
"குழந்தைகளே! எனக்கு ஓர் உடல்தான் இருக்கிறது. ஆனால் மூன்று உயிர்கள் இருக்கின்றன. அவ்வுயிர்களே நீங்கள். உடலின் முன் நிற்கும் உயிர்களாக உங்களை நான் கருதுகிறேன். நீங்கள் என்னை எவ்வாறு கருதுகிறீர்கள், எவ்வளவு நேசிக்கிறீர்கள். என்பதை என் காதாரக் கேட்க விரும்புகிறேன்,” என்று இவ்வாறு மன்னன் தன் மூன்று புதல்வர்களிடமும் பேசினான்.
க
"என் இன்னுயிரினும் எனக்கு அருமையான தந்தையே! தங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நான் எவ்வாறு, என்ன மொழிகளில் கூறுவேன்? நான் கற்ற கல்வி முழுவதும் அதை எடுத்துரைக்கப் போதாது. ஆனால் தாங்கள் என் சொல்லை வைத்து அளக்காமல் அதன் ஆர்வத்தால் அளந்து காண்பதானால், தங்கள்பால் எனக்குள்ள நேசத்தை நான் ஒருவாறு எடுத்துரைப்பேன்.”
“பொன்னையும் மணியையும்விட, இப்பூவுலகு முழுதும் ஆளும் பேற்றைவிட, உலகத்தின் செல்வத்திரள் அத்தனையையும் விட நான் தங்களை மிகுதியாக, எவ்வளவு மடங்கோ மிகுதியாக, நேசிக்கிறேன்," என்று கூறினான் மூத்த புதல்வன்.
மன்னன் முகம் மலர்ச்சியடைந்தது.
அண்ணனுக்குப் பின்னிடையக் கூடாதென்ற எண்ணத் துடன் நாடக மேடையில் நடிகன் நடப்பதுபோல நடந்து முன் வந்தான், இரண்டாவது புதல்வன்.
66
"அரசருள் சிறந்த அரசே, தந்தையருள் சிறந்த தந்தையே! உங்கள் தகுதியை உங்கள் மக்கள் அளந்து கூற முடியுமோ? அது