சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
283
முடியாதது போலவே, நான் உங்களிடம் கொண்ட நேசத்தையும் என்னால் அளக்க முடியாது."
“அது என் அறிவுக்கு அப்பாற்பட்டது, என் ஆற்றல் கடந்தது, என் அன்பு, நட்பு இன்பம் ஆகிய யாவற்றையும் தாண்டியது.”
"பாலையும் தேனையும் பழத்தையும்-இனிய சிற்றுண்டி களையும் நான் உங்கள்பால் கொண்ட நேசத்துக்கு ஒப்பிட முடியுமா? என் நேசத்தின்முன் பால் உவர்க்கும், தேன் புளிக்கும், பழம் கசக்கும். இனிய சிற்றுண்டிகள் யாவும் உவட்டும்,”
"உங்களிடம் நான் கொண்ட நேசம் கடலினும் ஆழமுடையது, மலையினும் உயரியது, வானகத்தினும் அகன்றது. அது கதிரவனைவிட ஒளி மிக்கது, நிலவைவிடக் குளிர்ச்சியானது, சோலைகளைவிட வளமானது. அதற்கு அளவுகோலும் உவமையும் அதுவே,” என்றான் அவன்.
மன்னன் உவகைக் கடலுள் ஆழ்ந்தான்.
மூன்றாவது புதல்வன் இருவரினும் இளையவன், அவன் முகம் பால் வடியும் இளமைநலம் உடையதாயிருந்தது. அவன் சொற்களில் இன்னும் மழலை மொழியின் இனிமை மாறிவிட வில்லை. அவன் தந்தைமுன் வந்து நின்றான். தந்தைக்குத் தலைகுணிந்து வணக்கம் செய்துவிட்டு வாய்திறந்து பேசினான்.
மூத்தவன் கவிதை பேசினான்; அடுத்தவன் காவியம் காட்டினான்; இளையவன் என்ன கலைப்பண்பு காட்டுவானோ என்று ஆவலுடன் நின்றனர் அவையோர்.
66
அரசே! நீங்கள் என் தந்தை; நான் உங்கள்பிள்ளை. தந்தையின் பாசம் உங்களுக்கு என் மீது உண்டு. பிள்ளையின் கடமை தங்கள் மீது எனக்கு உண்டு. ஆனால், என் நேசத்தின் பான்மையைக் கூறுவதானால் அது உப்பின் சுவைபோன்றது," என்றான் அவன்.
மன்னன் முகம் சுண்டிற்று. கழிபேருவகைக் கடலுள் மிதந்த அவன் உள்ளம் கடுஞ்சினம் என்னும் எரிமலையின் தீக்குழம்பில் பட்டதுபோல் கனன்றது.