உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நெல்லையும் நிலனும்

குடியானவன் வேலனுக்கு நீலன் மகன்; நெல்லை மருமகள். அவர்கள் இருவரையும் கணவனும் மனைவியும் ஆக்க வேண்டுமென்று வேலன் விரும்பினான். நுண்ணறிவுடைய நெல்லை இதை உணர்ந்து கொண்டதுடன், அதற்கிணங்க அவனை நேசித்தும் வந்தாள். ஆனால், நீலன், வேலன் குறிப்பை அறிந்து கொள்ளவுமில்லை; அவளிடம் சற்றும் அன்பு கொள்ளவு மில்லை.

ஒருநாள் வேலன், நீலனைக் கூப்பிட்டு நெல்லையை மணந்து கொள்ளும்படி சொன்னான். நீலன் தனக்கு அவள் மீது சற்றும் விருப்பமில்லை; ஆதலால் அவளை மணந்து கொள்ள முடியாது என்று கூறவே, வேலன் கடுஞ்சினங் கொண்டு, "என் விருப்பப்படி நடக்க முடியாவிட்டால் என் வாயிற்படியிலும் நில்லாதே. வெளியே போ,” என்றான்.

நீலன் மறுமொழி பேசாமல் வெளியே போய்விட்டான். அவன் திரும்பி வரவேயில்லை. கூலியாட்களுடன் சென்று அவன் வேலை செய்தான் என்று அயலார் கூறினர். வேலன் மனம் மாறவில்லை. நெல்லை மனம் வருந்தினாள்.

நீலன் திருமணமும் வாழ்க்கையும்

நீலன், கூலிவேலையிலீடுபட்டிருந்த வள்ளி என்ற ஓர் ஏழைப்பெண்ணை விரும்பி அவளை மணந்தான். நீலன் தன்னை மணக்காததோ, விரும்பிய பெண்ணை மணப்பதோ, அவன் குற்றமாகாது என்று நெல்லை சொல்ல வாயெடுத்தாள். வேலன் கடுமையாகச் சீறி, “அவன் பேச்சே இங்கு வேண்டாம். இனிமேல்

அவனுடனோ அவனைச் சேர்ந்தவர்களுடனோ

உரையாடவும் கூடாது, எச்சரிக்கை,” என்றான்.

நீ