உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

15

நெல்லை அதற்கப்புறம் நீலனைப் பற்றிப் பேசத் துணியவில்லை.

நீலனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஒரு சில நாள் அவன் மகிழ்ச்சி யோடிருந்தான். ஆனால், வறுமை அவனை வாட்டியது. கூலித் தொழில் செய்தறியாத அவன் உடல் தளர்ந்து நோய்க்கு உள்ளாயிற்று. முன்னைய நீலனின் நிழல்போல் அவன் வேலன் வீட்டின் வழியாக அடிக்கடி போவான். வேலன் மனம் மாறாதா என்று நெல்லை ஏங்குவாள். ஆனால், வேலன் மனம் மாறிற்றோ மாறவில்லையோ, அவன் முகம் சற்றும் மாறவே இல்லை.”

நெல்லையின் மனம்

நெல்லை தனக்குக் கிட்டிய சில்லறைக் காசுகளைச் சேர்த்து வைத்து அடிக்கடி நீலனுக்கு அனுப்பி வைப்பாள். அது யாரிடமிருந்து வந்தது என்று நீலனுக்குத் தெரியாது. அவன் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் எண்ணம் முற்றும் தன் மனைவி மக்களைக் காப்பதெப்படி என்ற கவலையிலேயே ஆழ்ந்திருந்தது. வள்ளி, ஓரளவு யார் அதனை அனுப்பியிருக்கக்கூடும் என்பதை உய்த்துணர்ந்தும் ஒன்றும் கூறவில்லை.

அடிக்கடி மனைவியையும் பிள்ளையையும் எண்ணித் தந்தையின் வீடு நோக்கி நீலன் வருவான். நிமிர்ந்து நிற்கும் அவ்வீட்டைக் கண்டதும் அவன் ஆண்மை அவனைப் பின்னுக்குத் தள்ளித் திருப்பி அனுப்பி விடும். "பிள்ளையை ஒட்டி தந்தையின் முன் பிள்ளைக்காக மண்டியிடுவதா?” என்று அவன் நெஞ்சு குமுறும்.

நெல்லையும் வள்ளியும்

வறுமைக்கும், நோய்க்கும் இரையாய் அவன் இறுதியில் உலகுநீத்தான். வள்ளி தன் துணையற்ற சிறுவனிடம் இன்னது செய்வதென்று அறியாமல் கலங்கினாள். அப்போது நெல்லை அவளிடம் வந்து, “வள்ளி! உன் துன்பங்களை நான் அறிவேன். என் மாமன் மனம் மாறும் என்று இதுவரை பார்த்தேன். இனிப்