உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

வேட்டை நாய் அவள் ஆடையைப் பற்றி இழுத்தது.

305

நடந்தது இன்னதென்று அறியுமுன் காவலர் படைத் தலைவர்கள் தலைமையில் முதலமைச்சன் வந்து அவளை எதிர் கொண்டு அழைத்துச் சென்றான். அவளை ஆண் என்றே யாவரும் நினைத்த படியால், அவளையே அரசனாகும்படி வேண்டினர்.

பெண்ணேயானாலும் மன்னனருகிலிருந்து ஆட்சி முறைகளை மகீமன்ஃசார் நன்கு கவனித்து உணர்ந்திருந்தாள். முதல் நாளிலேயே நல்லாட்சி செய்யும் திறன் தனக்கு உண்டு என்பதை அவள் காட்டினாள்.

தன் தேர்வின் அறிகுறியாகச் சிறைப்பட்டவர்களை அனைவரையும் விடுவிக்கும்படியும், ஓராண்டு குடிகள் அனைவரின் வரியையும் அகற்றும்படியும், ஏழை எளியவர்களுக்கு உணவளிக்கும் படியும் அவள் உத்தரவிட்டாள்.

இளவரசியின் புதிய உத்தரவினால் விடுதலை அடைந்தவர்களில் அக்தாரும் ஒருவன். தன் விடுதலைக்குப் புதிய அரசனின் முடிசூட்டு விழாவே காரணம் என்பதை மட்டுமே அவன் அறிந்தான்.

புதிய அரசன் யார் என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. அது தன்னால் கடத்திக் கொண்டு வரப்பட்ட இளவரசியாயிருக்கக் கூடும் என்பதை அவன் கனவிலும் கருதியவன் அல்லன்.

இந்நிலையில் அவன் விடுதலையானதே மிகு விரைவாக நகர்ப் புறத்தில் தான் இளவரசியை விட்டுவந்த இடம் சென்று பார்த்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அவள் அங்கே இல்லை. அவள் எங்கே சென்றாள் என்பது பற்றிய தகவலும் எதுவும் கிடைக்க வகையில்லாது போயிற்று.

கைக்கெட்டியதும்

வாய்க்கெட்டாமல்போன

அவப்பேற்றை நினைத்து அவன் வருந்தினான். எப்படியும் இளவரசி நகருக்குள்தான் சென்றிருக்க வேண்டும்.