உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அப்பாத்துரையம் 36

வில்லியின் சிறுபிள்ளைக் குறும்புத்தனம் வளர்ந்து இளைஞனான பின் இன்னும் வரம்பு கடந்துவிடப் படாதே என்று எண்ணிய கர்னலால் அவனுக்குப் படைத்துறையில்லாத புதிய ஒழுங்கு முறைகளைத் தேடித் திட்டப்படுத்தியிருந்தார். தாய், செவிலி ஆகியவர்களைத் தவிர வளர்ந்த பெண்களிடம் பேசுவது மதிப்புக்குக் குறைவு என்பது அவன் மனதில் குத்தியேற்றப்பட்டது. மற்ற “வரம்புகளுக்குக் கீழ்ப்படியாத வில்லி, இந்தப் பெரிய கோட்டையைச் சரிவர மதித்து அதன் எல்லை கடவாதிருந்தான். என்ன இருந்தாலும் அவன் படைத்தலைவர் பிள்ளையல்லவா?'

வில்லி கண்ட காட்சி

வில்லி ஒரு நாள் தன் கண்ணைக் கூட நம்ப முடியாத ஒரு காட்சியைக் கண்டான். செம்பட்டு தந்தைக்கடுத்தபடி தானும் பிறரும் மதிக்கும் உயர்வுடைய செம்பட்டு தனிமையில் ஒரு வளர்ந்த பெண்ணுடன் நட்புரிமையுடன் பேசுவதை அவன் கண்டான். தந்தை அப்படிப் பேசுவது மதிப்புக்குக் குறைவு என்று சொல்லியிருக்கிறாரே! ஆண்டிலும் அறிவிலும் முதிர்சசி அடைந்த செம்பட்டு அப்படி நடப்பதேன் என்று அவன் குழந்தையுள்ளம் தனக்குத் தானே வியப்புடன் கேட்டுக் கொண்டது. அது செம்பட்டில்லாமல் வேறு யாராயிருந்தாலும் உடனே தந்தையிடம் ஓடித் தன் ஐயத்தைத் தீர்க்க முயன்றிருப்பான். வழியில் கண்டவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லி அவமதிப்பாய்ப் பேசியிருப்பான். ஆனால், “செம்பட்டு நண்பர், தனக்காக எத்தனையோ தடவை தந்தையிடம் தன் குற்றங்களைச் சொல்லாதிருந்தவராயிற்றே! நாமும் வேறு யாரிடமும் கூறப்படாது, அவரிடமேதான் கேட்கவேண்டும்,” என்று அவன் எண்ணினான்.

செம்பட்டினிடம் கேட்டல்

இத்துணிவுடன்

அவன்

செம்பட்டு

உட்கார்ந்த

மேடையண்டை சென்று ஆர்வமிக்க தோற்றத்துடன் “எனக்கு

ஒன்று கேட்க வேண்டும், கேட்கட்டுமா? கேட்கவேண்டாமா?" என்றான்.