உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

கூட

செம்பட்டு: ஏன் நன்றாகக் கேள்.

23

வில்லி: என் தந்தை “வளர்ந்த பெண்களிடம் பேசக் தாது; அது மதிப்புக்குறைவு," என்று என்னிடம் சொல்லிக் கண்டித்திருக் கிறார். அது சரி என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள்?

செம்பட்டு: (வியப்புடன்) ஆம் வில்லி! அது தவறுதான்.

வில்லி: அப்படியானால்

-

அப்படியானால் (என்று

தயங்கி) நீங்கள் ஏன் அப்படிப் பேசினீர்கள்?

இக்கேள்வியைக் கேட்டு பிராண்டிஸ் (செம்பட்டு) திடுக்கிட்டார். அவர் பேசியது பெண் மேஜர் அலார்டைஸ் என்ற போர்வீரரின் புதல்வி. அவளுடன் பிராண்டிஸ் சில நாளாக நேசங் கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவள் தந்தை இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என எண்ணி இருவரும் விரைவில் அவருக்குத் தெரியாமலேயே மணம்புரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்றும் புரியாத சிறுவனும் குறும்பனுமாகிய வில்லி இதை அறிந்துவிட்டதனால், இனி இது அம்பலமாய் விடுமே என்று பிராண்டிஸ் கவலை கொண்டார். அதனைக் காட்டிக் கொள்ளாமல் அவர், "நீ சிறு பையன். இதெல்லாம் உனக்குத் தெரிய இன்னும் சில நாள் செல்லும். அப்போது நீயும் இப்படியே பேசுவாய்,” என்றார்.

வில்லியின் சிறிய உள்ளத்திற்கு இது சற்றுப் புரிந்து கொண்டது. செம்பட்டின் வாளைத்தன்னால் எடுக்க முடியாத போது அவர் வளர்ந்தால் நீயும் இதனை எடுக்க முடியும் என்றது அவனுக்கு நினைவிருந்தது. அது போலவே இதுவும் என்று அவன் எண்ணினான்.

இதற்குள் செம்பட்டு அவனிடம், "நீ கண்டதை அப்பாவிடமும் பிறரிடமும் சொல்லிவிட்டாயா?” என்றார்.

வில்லி: சொல்லவும் இல்லை; சொல்லவுமாட்டேன். நான் உங்களுடைய பொருள்களை ய உடைத்தபோது நீங்கள் அப்பாவிடம் சொல்ல வில்லையல்லவா?