உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

அல்லியைப் பின்தொடர்தல்

25

அல்லி “நான் ஆற்றுக்கப்பால் செல்கிறேன்," என்று கூறிக்கொண்டு குதிரையைத் தட்டி ஓட்டினாள்.

அந்த ஆறு இந்தியாவின் எல்லையிலுள்ளது. அதற்கு அப்பால் உள்ளவர்கள் காட்டுமக்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள். திருட்டிலும் கொள்ளையிலும் சேர்ந்தவர்கள். வில்லி அவர்கள் பொல்லாதவர்கள் என்பதையும், ஆறு கடந்து சென்றால் பேரிடுக்கண் வரும் என்பதையும் பல தடவை சொல்லக் கேட்டவன். தன் செம்பட்டுக்கு உரியவளாகப் போகும் அவளுக்கு இடையூறு வருமே என்ற கவலையில் அவன் தன் சிறையையும் நன்னடத்தைக் குறிப்பையும் மறந்து தந்தையின் குதிரை மாடஞ் சென்று ஒரு மட்டக் குதிரை மீதேறிக் கொண்டு அவளைப் பின் பற்றினான்.

வில்லி ஆற்றின் கரையை அண்டுமுன் “அல்லியின் குதிரை நட்டாற்றுக்குச் சென்று விட்டது. ஆற்றில் தண்ணீர் இல்லாத தால் அவள் குதிரை மென்மணலிலும் கூழாங்கற்களிலும் சென்றது. இடையில் ஒரு கூழாங் கல்லில் கால் இடறிக் குதிரை விழுந்தது. அல்லியின் கால் குதிரையின் கீழ்ச் சிக்கி மொழி பிறழ்ந்து வீக்கமும் வலியும் எடுத்தது. அவள் பல்லைக் கடித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள்.

அல்லியும் வில்லியும்

அச்சமயம் வில்லி பக்கத்தில் குதிரையிலிருந்திறங்குவது கண்டு, “தம்பி நீ இங்கே ஏன் வந்தாய்?" என்றாள். வில்லி “உன்னை நாடித்தான் வந்தேன். ஆற்றுக்கப்பால் உள்ளவர்கள் பொல்லாதவர்களாயிற்றே! உனக்கு ஏதேனும் இடையூறு வந்துவிடுமே என்று அஞ்சி வந்தேன்,” என்றான்.

அல்லி, இச்சிறு பையன் தன்னைப் பற்றி ஏன், இவ்வளவு அக்கறை கொள்கிறான் என்றறியக் கூடவில்லை. ஆயினும் தன் வலியை அடக்கிக் கொண்டு அவனுதவியைப் பயன்படுத்த எண்ணி, “சரி, நீ கூடாரம் சென்று என் நிலைமைகளைக் கூறி உதவி அனுப்பு,” என்றாள்.