உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அப்பாத்துரையம் - 36

ஆனால், வில்லி திரும்பிச் செல்லவில்லை அதற்கு மாறாக அவன் குதிரையைச் சவுக்காலடித்துக் கூடாரத்தை நோக்கி ஓட்டினான்.

அல்லி: இதென்ன தம்பி இந்த வேலை செய்தாய்?

வில்லி: நீ என் செம்பட்டுக்கு உரியவள். உன்னைத் தனியே விட்டுச் செல்லமாட்டேன். அதோ பார் அந்தப் பொல்லாத மனிதர்களை.

காட்டு மக்கள்

வில்லி கூறியது உண்மையே. காட்டு மக்களுள் ஆற்றின் அக்கறையில் சென்று கொண்டிருந்த ஒரு கூட்டத்தினர் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனியேயிருப்பது கண்டு அவர்களை நோக்கி வந்தனர். அண்டி வந்ததும் அவர்கள் தங்கள் மொழியில், "நல்ல வேட்டையடா? இச்சிறுவனயும் சிறுக்கியையும் பிடித்துப் போவோம். பெண்ணுக்கு உடையவரிடம் இருந்து கை நிறையப் பணம் பெறலாம்,” என்றான்.

வில்லிக்கு அவர்கள் மொழி நன்றாய்த் தெரியும். அவர்கள் கூறியது கேட்டு அவன் அச்சங்கொண்டான். ஆயினும் தன் தந்தையின் பெயரின் பெருமையை விட்டுவிட அவன் விரும்பவில்லை. அவர்கள் மொழியிலேயே அவன், “டேய்! அண்டிவராதீர்கள்! என் தந்தையின் ஆட்கள் கண்டால் உங்கள் குருதியும் உங்கள் ஆட்கள் குருதியும் இவ்வாற்றில் ஓடும்," என்றான்.

66

வில்லியின் தந்தையிடம் வேலை பார்த்த ஒருவன் அக்கூட்டத்தில் இருந்தான். அவன் கூட்டத்தில் தலைவனிடம், பையன் கூறியது உண்மைதான். அவன் அந்த அடம் பிடித்த கர்னல் பிள்ளை. இந்தச் சிறு வருவாயை எண்ணி அவர் கையை விலைக்கு வாங்க வேண்டாம்," என்று கூறினான். அல்லி அதற்குள் செம்பட்டினிடம் குறிப்பாக அனைத்தும் கூறினாள்.

பாராட்டுதல்

கர்னல், தன் வில்லி வெறும் குறும்பனல்ல, பெரிய வீரன்; வீரர் இயல்பின் வித்து அவனிடம் இருந்தது என்று கண்டான். அது முதல் தன்கட்டுப்பாடுகளை நீக்கி அவனைப் போற்றினான்.