உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நளினியும் மல்லர்கோவும்

இரட்ட நாட்டு அரசனான அரிகேசரி சமயப் போர்களிலீடுபட்டு வெற்றியுடன் தாய்நாட்டுக்கு மீளும்போது வேற்றரசர் கையில் சிறைப்பட்டுவிட்டான். அவன்

சிறைமீட்கப்பட்டு வருமளவும் அவன் உடன்பிறந்தான் இளவரசன் விசயன் இரட்டநாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தான்.

விசயப் பெருந்தகையின் கடன்

அரிகேசரியிடம் பற்றுக்கொண்ட பெருமக்களுள் கோமகன் ஆகமவல்லன் என்பன் ஒருவன். ஒப்பற்ற வில்வீரனாகிய அவன் விசயப் பெருந்தகை என்ற இன்னொரு பெருமகன் புதல்வியாகிய நளினியைக் காதலித்து வந்தான். விசயப் பெருந்தகையின் புதல்வனான மாதவசேனன் அரிகேசரியுடனேயே சிறைப் பட்டிருந்தான். அவனை மீட்க விசயப் பெருந்தகைக்கு இரண்டாயிரம் பொன்கள் தேவையாயிருந்தன. விசயப் பெருந்தகையிடம் அவ்வளவு பெருந்தொகை இல்லாததனால் உவணகிரி மடத்தலைவனிடம் அத் தொகையைக் கடனாக பெற்று அனுப்பினான்.

அத்தொகையை அனுப்பிய பின்னும் நெடுநாளாக மாதவசேனனைப் பற்றிய செய்தி எதுவும் வரவில்லை உவணகிரிமடத் தலைவனிடமிருந்து கடன் வாங்குகையில் விசயப் பெருந்தகை அதனை ஓராண்டுக்குள் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவன் நிலங்களின் உரிமை முற்றிலும் மடத் தலைவனையே சேர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது.ஓராண்டுத் தவணை முடியும் நாள் நெருங்கி வந்தும் விசயப்பெருந்தகையிடம் கடனை மீட்டுக் கொள்ளப் போதிய பணம் சேரவில்லை.