உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

49

ரஸ்டம் கம்மிய குரலில், "தஃமீனா பெண்மகவு ஒன்றையே பெற்றாளென்று கேட்டேன். ஆண்மகவு

தோற்றவில்லையே,' என்றான்.

உண்மையறிந்து பெருந்துயர் அடைதல்

உண்டென் று

ஸோராப், ஆ! இப்போது நினைவு வந்தது. என் தாய் என்னைப் போரிலிருந்து தடுக்கப் பலகால் முயன்றதுண்டு. அதே எண்ணத்துடன்தான் நான் பெண் என்று தந்தைக்குக் கூடச் சொல்லியனுப்பியதாக அவள் கூறியதைக் கேட்டிருக்கிறேன். அச்செய்தியே உன் காதில் விழுந்தது போலும்,” என்றான்.

இம்மாற்றம் கேட்டதே ரஸ்டத்தின் மனத்தில் உண்மை மின்னல் போல் வந்து பேரிடிபோல் வீழ்ந்தது. அவன் ஒரு நொடி தன்னை மறந்து அலறினான். பின் எழுந்து வீழ்ந்தான்; அழுதான். தன் தலையிலேயே அடித்துக் கொண்டு “பாவி! நான் புதல்வனில்லை என்றிருந்துங்கெட்டேன். நான் வாழ்ந்த வாழ்வு, இத்துடன் ஒழிக!" என வாளால் தன்னையே வெட்டிக்

கொள்ளப் போனான்.

அச்சமயம் குற்றுயிராய்க் கிடந்த ஸோராப் எ எழுந்து அவன் காலை அணைத்து, "தந்தையே! ஒரு தடவை ஆத்திரப்பட்டுத் தீமை அடைந்து விட்டோம்." இனியேனும் பொறுத்துக் காரியம் செய்க. நான் மகிழ்ச்சியுடனேயே இறக்கிறேன்,” என்றான்.

நெஞ்சம் துருத்திபோல் எழுந்தெழுந்து சிதற, ரஸ்டம் மந்திரத்திற்குக் கட்டுண்ட ஐந்தலைய நாகமே போன்று நின்று, "மகனே! எவ்வளவுதான் வாழ்வு எனக்குக் கசப்பாயினும் உன் இறுதி விருப்பங்களை நிறைவேற்றுவேன். ஆண்டுகளை நாடிகளாகக் கழித்து நானும் உன் அன்னையும் உன்னுடன் சேர வீரத் துறக்கம் வருவோம்," என்று கூறி, என்று கூறி, உயிரை வழியனுப்பும் உடலே போல் அவனைத் தன் மடி மீது கிடத்திப் பிரிந்து மாழ்கினான்.