உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஆர்தர் வருகை

ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன் பிரிட்டனில்' அதர்2 என்றோர் அரசன் இருந்தான். உண்மையில் அவன் பிரிட்ட னை அக்காலத்தில் வென்று ஆண்ட ரோமர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகவேயிருந்தான். அவனிடம் அமைச்சனாயிருந்த மெர்லின் என்பவன் ஒரு மாயக்காரன்; அவன் ஒரு சிறந்த அறிஞனும் கூட.

அதர் நாட்களில் நாகரிகமிக்க வல்லரசாயிருந்த ரோம்3 நாட்டை நாகரிகமற்ற காத்தியர்4 என்ற முரட்டு மக்கள் படையெடுத்துச் சூறையாடினார். தம் தாய் நாட்டைக் காக்கும் வண்ணம் தாம் ஆண்ட பிரிட்டன் முதலிய மற்ற நாடுகளையெல்லாம் ரோமர்கள் கை விட்டுச் சென்றனர்.

வல்லமையும் நாகரிகப் பண்பும் மிக்க ரோமர் பிடி அகன்றதே. பிரிட்டானியர்5 தம் பழைய போர்க்குண மேலிட்டு ஒருவரையொருவர் எதிர்த்தழித்தும், பூசலிட்டும் வந்தனர். செழித்த வயல்கள் நிறைந்த நாடுகளெல்லாம் முட்புதரும் தீய விலங்குகளும் நிறைந்த காடுகளாயின. அதோடு கடற்கரை யெங்கும் ஸாக்ஸனீயர் என்ற கடற் கொள்ளைக்காரர் தொல்லை மிகுந்தது. வட எல்லையில் விலங்குகள் ஒருபுறமும் விலங்கையே ஒத்த ஸ்காட்டியர்” பிக்டுகள்° ஆகிய காட்டு மக்கள் ஒரு புறமாகச் செய்த அழிவுகளால் நாடு முற்றும் அல்லோலகல்லோலப் பட்டது. இங்ஙனம் பிரிட்டனின் வாழ்வில் சீர்குலைவும் குழப்பமும் ஏற்பட்டன.

அதரும் பிரிட்டானியரும் தமக்கு உதவி செய்யும்படி ரோமருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் தம் நாட்டினுக்காகப் போரிட்டுக் கொண்டிருந்தனராதலால், பிரிட்டானியர் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.