உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அப்பாத்துரையம் - 36

கழிவிரக்கத்துடனும் மன்னிப்புக் கோரினாள். “இன்னா செய்தாரையும் நன்மையைச் செய்து ஒறுக்கும் தாங்கள், இழிபிறப்பு உடையவராய் இருக்க முடியாது. தங்களின் உண்மை நிலையறியாது இகழ்ந்ததற்கு ஆயிரம் தரம் தங்களிடம் நான் மன்னிப்பு கோர வேண்டியவளாகிறேன்” என்று அவள் று வாய்விட்டுக் கூறினாள். தீமைக்கே நன்மை செய்த பெருந்தகை யாகிய காரெத் அவள் மனமாற்ற மடைந்ததற்கு மகிழ்ந்து அதைப்பாராட்டு முறையில், தான் ன்னான் என்பதை

அவளிடம் நம்பகமாகக் கூறினான்.

லயானிஸின் மாளிகைக்கு வெளிப்புறமுள்ள ஒரு படர்ந்த மரத்தில் கவசமணிந்த பல வீரர்கள் விழுதுகள்போல் கட்டப்பட்டுத் தொங்கினர். அதைக் கண்டு காரெத்தின் உள்ளம் பொங்கியெழுந்தது. அவர்கள் அனைவரும் லியோனிஸ் பெருமாட்டியை மீட்க வந்து தோல்வியையடைந்து செவ்வெளிநாட்டுச் செவ்வீரனால் தூக்கிடப்பட்டவர்கள் என்பதைக் காரெத்துக்கு லினெட் கூறினாள்.

காரெத் அம்மரத்தில் தொங்கிய ஒரு குழலை ஊதியதும் செவ்வீரன் கவசமணிந்து முன் வந்தான். மாளிகையிலிருந்து லியோனிஸ் பெருமாட்டி குழல் ஓசை கேட்டுப் பலகணியில் வந்து காரெத்தின் போரைக் கவனித்து நின்றாள். அவள் அப்போது அவனைத் தன் கனிந்த பார்வையால் ஊக்கியும் வந்தாள். பல மணி நேரம் கடுஞ்சண்டை நடந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவும் குத்தவும் தள்ளவும் பார்த்தனர். இறுதியில் செவ்வீரன் கை தாழ்ந்தது; அவன் உடல்வலிமையும் தளர்வுற்றது; அவன் பணிந்து "ஐய! உம் தாக்குதல்களை நிறுத்துக. நான் இனி உமது ஆள். உம் விருப்பப்படி நடப்பேன்," என்றான்.

காரெத், “நீ எனக்குப் பகைவனல்ல. நீ செய்த தீங்கெல்லாம் என் தலைவி லியோனிஸ் பெருமாட்டிக்கே அவளை மீட்க வந்த வீரரெத்தனையோ பேரை நீ கொன்றிருக்கிறாய்! அவளிடமே மன்னிப்புப் பெற்று உயிரை அவள் தருங் கொடையாகப் பெறுக,” என்றான். லியோனிஸ் பெருமாட்டியிடம் மன்னிப்புப் பெற்றுச் செவ்வீரன் விடுதலையடைந்தான். அதன்பின் காரெத் அவனைக் காமிலெட்டுக்கு அனுப்பி ஆர்தரிடம் அமருமாறு கூறினான்.