உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

67

தன் கவசத்தையும் தலையணியையும் விடக் கறுப்பு வீரன் கவசமும் தலையணியும் சிறந்தவை என்று கண்டு, காரெத் அவற்றை அணிந்து கொண்டு புறப்பட்டான்.

சற்றுத் தொலை சென்றதும், கறுப்பு வீரனின் உடன்பிறந்தானாகிய பச்சை வீரன் எதிரே வந்தான். அவன் காரெத்தைக் கறுப்பு வீரன் என்றெண்ணி வணக்கம் செய்யப் போனான். அதற்கு முன், மாது, அவனைத் தடுத்து, “இவன் உன் உடன்பிறந்தானுமல்ல; உன்னைப் போன்ற வீரனுங்கூட அல்ல, மிக இழிந்த பிறப்புடைய ஒரு சமையல் வேலைக்காரனே அதோடு அவன் என் உடன் பிறந்தானாகிய கறுப்பு வீரனைக் கொன்று விட்டு அவன் உடையையும் அணிந்து வந்திருக்கிறான். அவனிடம் பழிக்குப் பழி வாங்கி என்னைப் பிடித்த இப்பீடையையும் அகற்றுவாய் என்று நம்புகிறேன்,” என்றாள்.

நன்றிகெட்ட லினெட்டைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டுக் காரெத் பச்சைவீரனைத் தாக்கத் தொடங்கினான். காரெத்தின் வாள் வீச்சைத் தாங்கமாட்டாமல் பச்சை வீரன் பணிந்து உயிருக்கு மன்றாடினான். காரெத், தான் அழைக்கும் போது தன் வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வந்து மன்னிப்புப் பெற்று, அவர் பணியில் ஈடுபட வேண்டும் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு அவனை விடுவித்தான். அவனும் நன்றியுடன் காரெத்தை வணங்கிச் சென்றான். போகும்போது மாதை நோக்கி, "பெருந்தன்மை மிக்க இவ்வீரனை, அவமதிப்பது உனக்கு அழகன்று; நன்றியுமன்று; அவனைப் பாராட்டி மேன்மை அடைக,” என்று கூறி அகன்றார்.

பச்சை வீரனைப் போலவே கறுப்பு வீரனுக்குச் சிவப்பு வீரன் என்று இன்னோர் உடன்பிறந்தான் இருந்தான். அவனும் திர்ப்பட்டுத் தோற்க, தன் அறுபது வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வருவதாகக் கூறி அகன்றான்.

லினெட் மனத்தில் காரெத்தைப் பற்றிய எண்ண முற்றும் மாறுதல் அடைந்தது. தான் அவமதிக்க அவமதிக்க அவன் எதிர்க்காது பணிவதையும், தான் கடுஞ்சொல்கூறிப் புண்படுத்துந்தோறும் அவன் மேன்மேலும் இன்சொல்லே வழங்கி வருவதையும் கண்டு, அவள் தான் இதுவரை அவனைக் கடுமையாக நடத்தியதற்கு வருந்தி, மிகவும் பணிவுடனும்