உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128) ||__

அப்பாத்துரையம் - 37

கண்களிற் பிழிந்துவிடு' என்று சொல்லி வேறொரு மலரைக் கொடுத்தான். அதன்பின்பு அவன் திதானியா வகையில் தான் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றச் சென்றான்.

4. கழுதை மீது காதல்

இதற்கிடையில் நகரில் தீஸியஸ் மன்னன் திருமணத்திற்கு நாடகமாடத் தொழிலாளர் சிலர் எண்ணம் கொண்டனர். 'நகரில் சிறுவர் தொந்தரவு செய்வர். இரவில் நிலவு வெளிச்சத்தில் காட்டிற்குப் போய் ஒத்திகை நடத்துவோம்' என்று அவர்கள் முடிவு செய்தனர். தற்செயலாக அவர்கள் திதானியா உறங்கிக் கொண்டிருக்கும் மலர்ப்படுக்கை அருகிலேயே தங்கள் ஒத்திகையை நடத்த நேர்ந்தது. அதில் தலைமையான நடிகர் நிலையில் நடித்தவன் பாட்டம்3 என்பவன். அவன் ஒரு கோமாளியே எனினும் கல்வியறிவற்ற அத்தொழிலாளர் கூட்டத்தில் அவன் தலைவனாகக் கருதப்பட்டான். இதனால் அவனுக்கு ஓர் இறுமாப்பும் பெருமித நடையும் ஏற்பட்டன. அவனுடைய கோமாளித்தனத்தை இவை மிகைப்படுத்தின வேயன்றிவேறல்ல.

திதானியாவை ஏளனம் செய்து பணிய வைக்க இவனே சரியான பேர் வழி என்று ஓபிரான் நினைத்தான். அவனது கோமாளித்தனத்திற்கு ஏற்ற உருவத்தையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்தான். எனவே நாடக ஒத்திகையின் இருகாட்சிகளுக்கிடையில் உருமாற மறைவிடத்துக்கு அவன் வந்த சமயம் பார்த்து அவன் தலைமீது கழுதைத் தலை ஒன்றை வெட்டி வைத்துவிட்டான். அம்மாறுதலையறியாத கோமாளி வெளியே வர எல்லோரும் பார்த்துத் திகைத்தனர். சிலர் நகைத்தனர். அது கண்டு பாட்டம் சினங்கொண்டு அவர்கள் மீது சீறி விழுந்தான். அவர்கள் மூலைக் கொருவராகச் சிரிப்பை அடக்க முடியாமல் விலாவைப் பிடித்துக் கொண்டே அகன்றார்கள்.

பாட்டம் நடந்த ஓசையில் திதானியா விழித்துக் காண்டாள். அப்போது அவள் பார்வை பாட்டத்தின் மேல் விழுந்தது. உடனே அவள் அவன்மீது காதல் கொண்டு, "ஆ! என்ன அழகிய தெய்வீக உரு! வெளியழகே இவ்வளவு! அக அழகு எப்படி இருக்குமோ?" என்றாள்.