உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

129

பாட்டம்: ஏன் அம்மணி, அக அழகிருந்தால் அகத்திற்குச் செல்லும் வழி எனக்குத் தென்படாதா?

திதானியா:

'வேண்டா, வேண்டா; நீ

அகம் செல்லவேண்டா. இக் காட்டிலேயே உனக்கு நல்ல அகம் உண்டு பண்ணுகிறேன். நான் மனிதமாதல்லேன்; தெய்வமாது. எனக்கு உன்மீதுதான் காதல். என்னிடமே நீ வா. உனக்கு என்னுடைய தெய்வமங்கையர்கள் பணிபுரிவார்கள். அவர்கள் நல்ல ஆட்கள், பெயர்களும் நல்ல பெயர்கள். பயற்று நெற்று4, நூலாம்படை15 விட்டில் பூச்சி, கடுகுவெடிப்பு”! என்று சொல்லிக்கொண்டு அவர்களைப் பார்த்து, 'இவ்இனிய செல்வனுக்கு வேண்டிய நலன்கள் தருக. அவன் காண ஆடல் பாடல் புரிவீர்! நறுங்கனிகளும் தேனும் அவனுக்குக் கொண்டுவந்து தருவீர்!’ என்று உத்தரவிட்டாள். அதன்பின் அவள் பாட்டத்தைத் தன் அருகில் அழைத்து அவன் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ‘என் அருமைக் கழுதை மணியே! உன் அழகே அழகு! என்ன நிமிர்ந்தோடிய காதுகள்! என்ன பரந்த கண்கள்!” என்று சொல்லி அவனுடைய அழகில் மயங்கி அவனுக்கு முத்தங்கள் தந்து மகிழலானாள்.

பாட்டமும் இக்காதலைத் தனக்குத் தக்கதாகவே ஏற்றுக் கொண்டான். திதானியாவோ, அவள் காதலோ அவனுக்கு ஒன்றும் புதுமையாகப் படவில்லை. அரசியின் காதலை ஏற்று அரசரது நிலையில் உடன் தானே பேசத் தொடங்கினான்.

வன அரசி தன் மயிரடர்ந்த கன்னங்களை வருடுவதையோ, கழுத்தைக் கட்டிக் கொஞ்சுவதையோ அவன் பொருட்படுத்துவ தாகக் காட்டிக் கொள்ள வில்லை. அரசியின் காதலை ஒரு சிறு பொருளாகப் பெற்ற ஓர் அரசனது மனப்பான்மையுடன் நடக்கவுந் தொடங்கினான்.

பாட்டம்: ஏனடி, பயற்று நெற்று!

பயிற்று நெற்று: ஐயா, இதோ! உத்தரவு!

பாட்டம்: என் தலையைச் சற்றுச் சொறி, அடா நூலாம்படை!

நூலாம்படை: இதோ, ஐயா!