உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

147

பெலாரியஸும் இளைஞரும் காட்டில் வேட்டையாடி விட்டுத் திரும்புகையில்அவள் படுத்திருந்தது கண்டு முதலில் உறங்குகிறாள் என்று நினைத்தனர். ஆனால், அவள் மட்டுக்கு மிஞ்சி நெடுநேரம் உறங்குவது கண்டு அவளை எழுப்ப முயன்றனர். அப்படியும் அவள் எழவில்லை. அவள் இறந்தனள் என்று இதனால் உறுதிப்படுத்திக் கொண்டு அவர்கள் கன்றினைப் பிரிந்த ஆவெனக் கதறியழுதனர். அந்த ஒரு நாளைக்குள்ளாக ன்பிறந்து வளர்ந்தவர்களைவிட மிகுதியாக இமொஜென் அச்சிறுவருடன் பழகிவிட்டபடியால் அவர்களும் கையற்றவர்கள் போன்று கவன்றனர்.

இரவு நெடுநேரம் வரை அழுதரற்றியபின் பெலாரியஸ், இனி அழுது பயனென்ன? பிடலே போய்விட்டான், அவன் உடம்பை நல்ல முறையில் அடக்கம் செய்யவாவது முயல வேண்டாமா?' என்றான்.

காட்டில் ஒரு நறுஞ்சோலையினுள் பூம்படுக்கை செய்து அதில் அவள் உடலை, பண்ணும் இரங்கும் இனிய பாட்டுகளுடன் அடக்கம் செய்தனர்.

(பாட்டு)

பெலாரியஸும் இளைஞரும்:

கஞ்சமலர் கண்டுனது கண்மறத்தல் செய்யோம் காந்தளவை கண்டுனது கைவிரல்கள் மறவோம் செஞ்சொலிளங் கிளியதனால் சொல்மறத்தல் செய்யோம் தேம்பழத்தால் நின் உணவின் தீஞ்சுவையும் மறவோம்

வஞ்சமறு மான்மறியிற் சீரிளமை மறவோம்

வாழும்வரை உன்வாழ்வும் மாள்வும் இனிமறவோம்

நெஞ்சிலுறை கின்றமையாம் நேருறவா ராயோ நேயமுடன் யாமழைக்க நேருறவா ராயோ

5கூடப்பிறந்திலமே

78கூடப்பிறந்திலமே

பாலிடோர்:

கூடிப்பிரிந்தினம் மேல்-கூடுவோமே!