உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(148) அப்பாத்துரையம் - 37 மன்றலிள நிலவு தென்றலுள அளவும் காட்வேல் உன்றனுள் ஒளிவு- பொன்றிடாதே! வாழ்க்கையில் நிறைவென்ற ஒன்றையும் குறைவென்ற ஒன்றையும் அச்சிறுவர் பிடலே தம்மிடையே வந்த நாளிலும் தம்மை விட்டுச் சென்ற நாளிலுந்தான் கண்டனர்.பெலாயஸும் பொற்பெட்டியை இழந்தவன் அதன் திறவுகோலைக் கண்டு மனமழுங்குவது போலத் துணை இழந்து கதறும் தன் இளைஞரைக் கண்டு வருந்தினான் நிற்க. மயக்க மருந்தின் ஆற்றல் தீர்ந்து இமொஜென் விழித்தெழும்போது நள்ளிரவு கடந்த பின்யாமமாயிருந்தது. அப்போது அவள் என்றும் உறங்கி எழுவதுபோல் எழுவதாக முதலில் நினைத்தாள். சுற்றும் முற்றும் பார்த்தபோது, தான் இருப்பது அரண்மனையுமன்று, வீடுமன்று; காடே என்பது விளங்கிற்று.அப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாகத் திரைப்படக் காட்சிபோலப் பெலாரியஸினுடைய குகையின் நினைவுகள் வந்தன. 'அவர்கள், தான் இறந்துவிட்டதாக நினைத்திருப்பார்கள்; விடிந்ததும் அவர்களிடமே போவோம்' என்று முதலில் நினைத்தாள், ஆனால் கணவனது நினைவு இதனைத் தடுத்தது. அதன்பின் எப்படியும் இத்தாலி நாட்டுக்குப் போய் அவனைப் பார்ப்பது என்று துணிந்து புறப்பட்டாள்.ஆயினும் பழையபடியே திருவருள் குறுக்கிட்டு அவள் வாழ்க்கையை மாற்றிற்று. 8.போர் இமொஜென் காட்டுக்கு வந்தபின் ரோம் அரசர்க்கும் பிரிட்டன் அரசரான ஸிம்பலினுக்கும் போர் மூண்டது. ரோம் அரசர்படை ஒன்று பிரிட்டனுக்கு வந்து போர் தொடங்கிற்று. பாஸ்துமஸ் அப்படையோடு கூடவே பிரிட்டனுக்கு வந்தான்.ஆனால், அவன் தன் தாய்நாட்டுக்கெதிராகப் போரில் கலக்க எண்ணவில்லை. அவன் மனமும் இப்பொழுது நல்ல நிலையிலில்லை. இமொஜெனைக் கொன்று விட்டோம் என்ற எண்ணத்தினால் அவன் மனம் எவ்வகை அமைதியையும்