உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2 உண்மையில் 149 அடையவில்லை. அதன் பரபரப்புக் குறைந்ததேயன்றித் துயரம் குறையவில்லை. 'ரோமர்களோடு பிரிட்டனுக்கு வந்தால், தன்னையும் ரோமன் என்று நினைத்து எவரேனுங் கொல்லக்கூடும்; அன்றி, எதிரியுடன் சேர்ந்தவன் என்று ஸிம்பலின் கொலை செய்யவுங்கூடும்? எப்படியும் உயிரை விட்டுவிட வாய்ப்பு நேரும்' என்று கருதித்தான் அவன் அங்கே வந்தான். காட்டில் அலைந்து திரிந்த இமொஜென் ரோம் படை வீரரால் பிடிக்கப்பட்டாள். ஆனால் அவள் நாகரிகத்தையும் நற்குணத்தையுங் கண்டு ரோம் படைத்தலைவர் 17 லூஸியஸ் அவளைத் தன் பணியாளாக ஏற்படுத்திக் கொண்டான். இப்போரில் சேர்ந்து சண்டை செய்யவேண்டுமென்று பாலிடோரும் காட்வெலும் விரும்பினர். பெலாரியஸும் வீரனாதலின் அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட்டதுடன் தானும் உடன் சென்று போரிற் சேர்ந்துகொண்டான். போரில் ரோம் வீரர் மிகத் துணிகரமாகச் சண்டை செய்ததால் பிரிட்டனின் படை மிகவும் மலைவுற்றது. அச்சமயம் பாஸ்துமஸ் ஒருபுறம், பாலிடோர், காட்வெல் ஆகிய இளஞ்சிங்கங்கள் ஒருபுறம் நின்று தாக்கிப் பிரிட்டனின் படைக்கு ஊக்கந்தந்து வெற்றியுண்டாக்கினர். பாஸ்துமஸ் நாட்டுப்பற்றுக் காரணமாக வெற்றிபெறப் போர் புரிந்தானாயினும் அவ்வழியில் தான் இறவாமையால், பகைவனாகவே சிறை பிடிக்கப்பட்டான். ஆணுடை உடுத்த இமொஜெனும், அவள் தலைவனாகிய லூஸியஸும், இமொஜென் வாழ்க்கைக்கு உலை வைத்த சண்டாளனாகிய அயாக்கிமோவும் எஞ்சிய வீரருடன் சிறைப்பட்டனர். பாஸ்துமஸுக்கு அவன் எதிர்பார்த்தபடியே கொலைதீர்ப்பு அளிப்பதென்று துணியப்பட்டது. உ வீரத்துடன் போர் புரிந்ததற்காகப் பாலிடோரும் காட்வெலும் பாராட்டப்பெற்று நன்கொடை பெறும்படி கொண்டு வரப்பட்டனர். பாஸ்துமஸ் அங்கு வந்திருப்பதை இமொஜென் கண்டு கொண்டாள்.ஆனால் அவள் ஆணுடையிலிருந்த படியால் அவன் அவளை அறிந்து கொள்ளவில்லை. பாஸ்துமஸின் நண்பன் என்ற நிலையில் தன்னிடம் சில காலம் பழகிய