உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

151

இத்தறுவாயில் எல்லோரும் இமொஜென் தன் உயிரை மறுத்து, அவளுயிர்க்கு மன்றாடிய லூஸியஸ் என்ற பெரியானது உயிரைத்தான் கேட்பாள் என எதிர்பார்த்து நின்றனர். அரசன்கூட அதனை எதிர்பார்த்தே அவ்வாறு கூறினான். லூஸியஸும் அதுவே இயற்கையென நினைத்தவனாதலால், முன்கூட்டியே ‘நீ என் உயிரைக் கேட்காதே' என்றான். இமொஜென், அப்பெருந்தன்மை வாய்ந்த லூஸியஸை நோக்கி, யாவருந் திடுக்கிடும் வகையில், “என் ஐயனே! மன்னிக்கவேண்டும். உங்கள் உயிரினும் சிறந்த பொருளாக நான் கேட்க வேண்டுவது ஒன்று உளது” என்றாள். "இவ்வளவு இளமையும் அழகும் காண்ட சிறுவனிடம் இத்தனை நன்றி கொல்லுந் தன்மையும் இருக்க முடியுமா?" எனப் பலரும் மூக்கிற் கைவைத்து வியந்தனர்.

கருமமே கண்ணாய் நின்ற இமொஜென் பிறர் எண்ணத்தைப் பொருட்படுத்தவில்லை. தான் இன்னதுதான் கேட்கவேண்டும். என்பதை அவளது கூரிய அறிவு நொடிப்பொழுதில் முடிவு செய்துவிட்டது.

அயாக்கிமோவைச் சுட்டிக்காட்டி, "அதோ நிற்பவர் கையில் ஒரு வைரக்கணையாழி இருக்கிறதே அது அவர் கையில் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்தறிய வேண்டுகிறேன்” என்றாள்.

"என்ன புதுமையான கேள்வி இது! என்ன முட்டாள் தனமான கேள்வி" என்றுகூடப் பலர் எண்ணினர்.

முதலில் அயாக்கிமோ யாதும் கூற மறுத்துப் பார்த்தான். ஆனால் இவ்வுண்மையை வெளியிடா விட்டால் படிப்படியாகக் கொலை செய்யப்படுவதாக அச்சுறுத்தப்பட்டபின், அவன் முழு உண்மையையுங் கூறிவிட்டான்.

இதற்கு முன்னமேயே கொலைத்தீர்ப்பை அவாவி நின்ற பாஸ்துமஸ் குற்றமற்ற தன் மனைவியைக் கொன்றுவிட்டோமே என்ற கவலையால் தன்னை மிகவும் நொந்துகொண்டான்.அவன் அரசன்முன் வந்து, இமொஜெனுக்குத் தான் செய்த தீங்கையும் வெளிப்படுத்தி, “என் இமொஜென் இறந்தபின் நான் இனி உயிர் னி வாழேன்; என் உயிரை நீங்கள் வாங்காவிடின், நான் வாங்க வேண்டியதே” என்று சொல்லிப் புலம்பினான்.