உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

179

என்றபோது, அயாகோ ஏதோ பெரியதோர் உள்ளுறைக் கருத்துடையவன் போலப் புருவங்களை நெரித்துக்கொண்டு தன்னை அறியாமல் உட்கிடக்கையை வெளியிடுபவன் மாதிரி, ‘அதுவும் அப்படியா!' என்று பெருமூச்சு விட்டான்.

இப்போது ஒதெல்லோவின் மனத்தில் சிதறிக்கிடந்த பல செய்திகளும், ஐயப்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து உருப்பெறத் தொடங்கின. 'அயாகோ நேர்மையுடையவன், காசியோவிடம் கொண்ட நட்பினாலேதான் உண்மையை வெளியிடத் தயங்குகிறான்' என்ற எண்ணம், அவனது ஒவ்வொரு குறிப்பிற்கும் எல்லையற்ற பொருள் கொடுக்கும்படி அவனைத் தூண்டிற்று.எனவே, அவன் அயாகோவிடம், 'ஒளிவு மறைவின்றி எனக்கு உண்மையைக் கூறுக' என்றான்.

5. பொய்யும் சொல்வன்மையினால் மெய்யாம்

ஓர் உயரிய நாடக ஆசிரியன் தன் கதைப் போக்கைத் தன் உரைகளாற் கூறாமல் பிறருடைய உரையாடல்களாலேயே ணைத்துக் கொண்டு கூட்டுவான். அதுபோல அயாகோவும் தான் ஒதெல்லோவின் மனத்தில் எழுப்ப நினைத்த இருண்ட எண்ணங்களை நேரிடையான மொழிகளால் கூறாமல், குறிப்பாகப் பல செய்திகளாலும் செய்திகளாலும் புனைவுரைகளாலும் இயற்கையாய் எழும்வண்ணம் கூறத்தொடங்கினான். ‘மனதிற் பட்டவையெல்லாம் உண்மைகள் ஆகுமா? பல சமயம் மிக இருண்ட நினைவுகள் மனத்தில் எழுவதுண்டு. அவை உண்மையாகவும் இருக்கலாம்; பொய்யாகவும் இருக்கலாம். அவற்றை ஆராயாது கூறினால் எவ்வளவு தீங்கு விளையும்' என்று தன்னையும் காத்துத் தான் கூற விரும்பும் செய்தியின் இயல்பையும் குறிப்பாகக் காட்டினான். 'அதனால் எத்தனையோ நல்லவர்கள் கெட்ட பெயர் அடையும்படி நேரும்' என்று கூறி ஒதெல்லோவின் குழம்பிய ஐயத்தை ஒருவரிருவர் மீது செலுத்தினான். 'அதிலும் மனைவியைப் பற்றிக் கணவன் ஐயம் கொள்ளுதல் மிகக் கொடிது. இருவர்க்கும் அது தீது; வாழ்ககை அமைதியும் அதனால் கெடும்' என்று கூறி ஒதெல்லோவின் மனத்தில் குமுறியெழும் ஐயப் புயலை டெஸ்டிமோனா பக்கமாகச் சாய்த்தான்.