---
180) ||-
அப்பாத்துரையம் – 37
யானைகளையும் சிங்கங்களையும் எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வல்லமையுடைய சிங்கவேற்றைப் பல்லாயிரக் கணக்கான சுண்டெலிகள் பலநாள் தொடுத்துப் பொருது வதைத்துக் கொல்ல முடியுமன்றோ? அதுபோல் டெஸ்டிமோ னாவின் மீதும் அவளது கற்பின் மீதும் ஒதெல்லோ வைத்திருந்த மாறாத பற்றையும் நன்மதிப்பையும் அயாகோ என்னும் மந்திரக்காரன் ஏவிய ஐயங்களும் தூண்டுதல்களும் சென்று தாக்கத் தொடங்கின. அப்பற்றின் உறுதி முதலில் அவற்றைச் சிதறடித்தது. 'என் மனைவி ஓர் அழகி என்பதும், மனிதரது கூட்டுறவு களியாட்டம் உரையாடல் இவற்றில் விருப்புடையவள் என்பதும் எனக்குத் தெரிந்தவையே; ஆனால், இவை மட்டிலும் குற்றங்கள் ஆகிவிடா. உண்மையில் கற்பு இருக்கும் இடத்தில் இவை சிறந்த குணங்கள் ஆம். அக்கற்புக்குக் குறைவு கூற நான் மும்முறை தயங்குவேன்' என்று ஓதெல்லோ கூறினான்.
ஒதெல்லோவின் இவ்வுறுதியையும், மனைவியின் கற்பில் குறைவு கருதத் தயங்குவதையும் அயாகோ மிகவும் போற்றினான். 'டெஸ்டிமோனா கறையுடையவள் என்பதற்குத் தெளிவென்ன?' என்று அவன் நேரில் கேட்டபோது, ‘அதற்குத் தெளிவே இல்லை. அது வெறும் ஐயப்பாடே. அதன் சுழலில் நீங்கள் விழவே கூடாது' என்று அயாகோ தனது உண்மை எண்ணத்திற்கு நேரெதிரான மொழிகள் கூறினான்."ஆனால் அவள்மீது குருட்டு ஐயுறவு கொள்வது எவ்வளவு தவறோ அவ்வளவு அவள்மீது குருட்டு நம்பிக்கை வைப்பதும் தவறேயாகும். கருப்பர்களாகிய நீங்கள் கபடறியாதவர்கள். இத்தாலியர், அதிலும் இத்தாலியப் பெண்கள் இயல்பை இத்தாலியராகிய நாங்களே நன்கு அறிவோம்" என்று ஐயத்தின் மீது அயாகோ தன் சொல் துருத்தியால் காற்றை ஊதினான். மேலும், 'உங்கள் காதலை ஏற்றதே அவள் இயற்கைக்கு மாறானது அன்றோ? அவள் தந்தைகூட அதனை ஏதோ மாயக்காரத்தனம் என்றுதானே நம்ப
டமிருந்தது! காதலுக்காகத் தந்தையை வஞ்சிக்கத் துணிவு கொண்டவள் கணவனையும் வஞ்சிக்கலா மன்றோ? என்று கூறிய உரைகணைபோல் ஓதெல்லோவின் உள்ளத்தையுங் கடந்து அவனது உயிர்நிலையை ஊடுருவிச் சென்றது.
வ்வளவு சொல்லிவிட்டு, 'ஐயையோ! என்ன காரியம் செய்து விட்டோம்! ஒருவர் மனைவாழ்க்கைக்கு உலை