உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

181

வைத்துவிட்டோமே!' என்று திடுக்கிட்டுப் பின்வாங்குபவன் போல அயாகோ பின்வாங்கினான். ஆனால், ஓதெல்லோ அதற்கு டங்கொடாமல் தன் மனத்தில் எழுந்த காட்டுத்தீயை வெளிக்காட்டாது மறைத்துக் கொண்டு, 'நீ அறிந்ததைக் கூறுவதில் பிழையில்லை. நான் ஒன்றும் ஆய்ந்தோயாது நம்புபவன் அல்லன். காசியோமீது ஐயப்பட இடமுண்டா ா என்பதைக் கூறுக' என்றான்.வானம் பார்த்த வறண்டபுலம் போல் இப்பணிக்கே காத்திருந்த அயாகோ காசியோவின் நேர்மைக் குணத்தின்மீதும் போர்தொடுக்கலானான். 'தன் இனத் தாரிடையே அழகுமிக்கார் பலரை வெறுத்து டெஸ்டிமோனா ஓதெல்லோவைத் தெரிந்தெடுத்தது பிறர்க்கிணங்காத் தன் ஆண்மையை உணர்த்தவில்லையா? காதலிக்கும்போதே உங்களையும் காசியோவையும் அவள் ஒப்பிட்டு உங்களிரு வரிடையேயுள்ள தோற்ற வேற்றுமை, நடை வேற்றுமைஇவற்றைக் கவனித்துத் தானே இருப்பாள்? அவள் காசியோவுக்காக மன்றாடுவது வெறும் பரிவுக்கு மேற்பட்டதாக இல்லையா?' என்றெல்லாம் ஓதெல்லோ மனதிற்படக் கூறியபின், ‘இதனைத் தேர்ந்தறிய வேண்டின், காசியோவை மன்னித்துப் பணியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் சற்றுத் தாமதம் செய்தால் போதும். அப்போது அவள் நடையிலிருந்து உண்மை அறியலாகும்' என்று தூண்டினான். இங்ஙனம் டெஸ்டிமோனாவின் நற்குணமும் உயர்வுமே இந்நயவஞ்சகக் கொடியோன் கையில் அவள் அழிவுக்காக விரிக்கப்பெற்ற வலையாயிற்று.

6. கைக்குட்டையே கழுத்துக் குட்டையாதல்

தக்க முடிவான சான்றுகளின்றி மனைவி மீது ஐயம் கொள்ளலலாதென அயாகோ ஒதெல்லோவை வற்புறுத்தி வேண்டிக் கொண்டான். ஒதெல்லோவும் அங்ஙனமே பொறுமையை இழவாமல் அவள் செயலை ஆராய்வதாக உறுதி கூறினான்! ஆனால் நாவின் உறுதி எங்கே? மன உறுதி எங்கே? இனி ஒதெல்லோ இழந்த அமைதிதான்! அபினி முதலிய மயக்க மருந்துகளாலோ மந்திரத்தாலோ அஃது அமைவதும் அன்று. அவன் எண்ணத்துக்கும் மொழிக்கும் செயலுக்கும் உள்ள தொடர்பு அற்றது. உண்ணும்போது அவன் உண்டானும் அல்லன்; உடுக்கும்போது அவன் உடுத்தானும் அல்லன்;