சேக்சுபியர் கதைகள் - 2
183
ஒதெல்லோ: சரி, நான் நேரில் ஆராய்கிறேன். நீர் சொல்வது உண்மையாயின், அக் காசியோவை மூன்று நாட்களுள் தூக்கிலிடுவேன். அதன்பின், அந்தக் கொடிய அழகிய நச்சுப் பாம்பைக் கொல்ல உலகில் இல்லாப் புதுவகை தேடுவேன்.
‘சீற்றத்திற்குக் கண்ணில்லை' என்பர் ஓதெல்லோவிற்குத் தன் மனைவி, தன் நண்பன் இருவர் உயிரையும் ஒழிக்கத்தக்க பெரிய குற்றச்சாட்டிற்கு இந்தச் சிறு கைக்குட்டையே போதிய சான்றாகப்பட்டது. உண்மையில் டெஸ்டிமோனாவுக்கோ, காசியோவுக்கோ
க் கைக்குட்டைக் கதை ஏற்பட்ட வகை தெரியாது. அயகோவின் மனைவி டெஸ்டிமேனாவுக்குத் தோழியாயிருந்தாள். அயாகோ அக் கைக்குட்டையைப் பார்த்து மாதிரி எடுத்துக்கொண்டு தருவதாக அதனை மறைவாய் எடுத்து வரச்செய்து காசியோ கண்ணிற்படும்படி வழியில் போட்டு வைத்தான். அதன் அழகைக் கண்டு வியந்த காசியோ, வினைவலி முன் இழுப்ப, அதனை எடுத்துக் கொண்டதனாலேயே அயாகோ இவ்வளவு புனைவும் செய்ய முடிந்தது.
அன்றிரவு ஓதெல்லோ தன் மனைவியைக் கண்டபோது தனக்குத் தலையிடிப்பதாகவும், எனவே நெற்றியில் அவளது கைக்குட்டையைக் கட்டும்படியும் கூறினான். அவள் அதற்கு ஏதோ ஒரு கைக்குட்டை கொணரவும், 'இது வேண்டா; நான் கொடுத்த கைக்குட்டையை எடு என்றான். அவள் தேடிப்பார்த்துக் ‘காணவில்லை' என்றாள். உடனே ஓதெல்லோ அக்கைக்குட்டை தன் குடும்பத்தில் வழி வழி வந்த தெய்வத் தன்மை மிக்கதொரு கைக்குட்டை என்றும், அதை இழந்தவர் கணவன் அன்பை இழப்பர் என்றும் அச்சுறுத்தினான். டெஸ்டிமோனா இது கேட்டு உண்மையிலேயே தன் கணவன் அன்பை இழப்போமா என்று அஞ்சினாள்; (இழந்து விட்டோம் என்பதை அடுத்த நொடியே அவள் அறிய இருந்தாள்) அதன்பின் ஓதெல்லோவின் முகமும் மொழியும் செயலும் மாறிவிட்டன. பேய்போல் விழித்தான்; பாம்புபோல் சீறினான்; புலிபோல் பாய்ந்தான்.டெஸ்டிமோனா இதன் மாயம் ஒன்றும் அறியாமல் இஃதெல்லாம் காசியோவுக்காகத் தான் பரிந்து பேசுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடிக்கும் நடிப்புப் போலும் என்று நினைத்தாள்.
து