உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2 2

195

ஆர்ஸினோ: உன் திறனைப் பற்றி நீ அவ்வளவாக அறியமாட்டாய். இதுவரை என் காதலைத் திறம்பட உன் போன்றோர் எடுத்துக் கூறாத குறைதான் அவள் என் பக்கம் இன்னும் நாடாதது. நீ பொற்பும் இனிமையும் மிக்க தோற்றமுடையாய்! அதோடு, காதலின் உயிர் நாடியை அறிந்து, நயத்துடன் மருந்துதவும் மருத்துவன் போன்றவனாயுந் திகழ்கின்றாய். ஆடவனாகிய என்னைவென்ற நீ பெண்ணாகிய ஒலிவியாவை வெல்வது அருமையன்று என்று நான் அறிவேன்.

66

வயோலா மனத்திற்குள், “ஆ! ஆடவரைத்தான் நான் வெல்ல விரும்புகின்றேனேயன்றிப் பெண்டிரை வெல்ல விரும்பவில்லையே" என்று நினைத்துக் கொண்டாளாயினும், வெளிப்பட, என்னாலானவரை அவ் ஒலிவியாவின் கல்மனத்தைக் கரைக்க முயல்வேன்" என்று கூறிவிட்டுச் சென்றாள். ஆயினும் அவள் கால்கள் ஒவ்வோரடியும் முன் செல்லுந்தோறும் இரண்டடி பின் செல்ல வேண்டும் என்று நினைத்தனவென்றே கூறவேண்டும்.

3. மாற்றுருவால் நேர்ந்த மாயக் காதல்

ஆர்ஸினோவிடமிருந்து மீண்டும் இளைஞன் ஒருவன் வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் ஒலிவியா பணிப் பெண்ணைச் சினந்து, “அதை என்னிடம் வந்து சொல்வானேன். 'அவளுக்கு உடம்புக்குக் குணமில்லை; துயில்விட்டு எழவில்லை; குளிக்கிறாள்' என்று ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி அனுப்பிவிடுகிறது தானே" என்றாள்.

பணிப்பெண்: நான் சாக்குப் போக்குகள் என்னென்ன வெல்லாம் சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்லிப் பார்த்தாயிற்று. அம்மணி! அவன் ஒவ்வொன்றுக்கும் நம்மை விடத் திறம்பட வாயடைத்துப் பேசிக்கொண்டு இங்கேயே இருப்பேனென்று காத்திருக்கிறான். அவளுக்கு உடம்பு நலமில்லை என்றால், அதையறிந்து நலஞ்செய்யவே வந்திருக்கிறேன் என்கிறான். துயிலுகிறாள் என்றால், அவளைத் துயிலினின்றும் உணர்த்துவேன் அல்லது துயிலுணரும் வரையிற் காத்திருந்து பார்ப்பேன் என்று இருப்பதாகக் கூறுகிறான். அவள் இன்னும் குளித்து உணவருந்தவில்லை என்றால் அதற்கென்ன,நான்குளித்து