உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(196) || — — — ||__

அப்பாத்துரையம் - 37

உணவருந்தியாயிற்று; ஆதலால் பொறுமையுடன் மெல்லக் குளித்து உண்டபின் பார்த்துக் கொள்வேன் என்கிறான். இனி என்ன சாக்குப் போக்குச் சொல்வதென்று விளங்கவில்லை. அதனாலேதான் உங்களிடம் வந்தேன்.

ஒலிவியா: அப்படியா, பெண்களிடமும் இப்படித் திறங்காட்டும் அந்த மனிதனைச் சற்றுப் பார்க்கவேண்டும்தான். அவனை வரச்சொன்னதாகச் சொல்.

துறக்கவாசல் திறந்துவிட்டது; இனி இறைவியின் அருள் ஒன்றே வேண்டும்.

பெண்மையில் ஓர் ஆண் அழகும், ஆண்மையில் ஒரு பெண்ணழகுந் தோன்ற வயோலா வணங்கிய வடிவுடன் மெல்லென உட்புகுந்தாள்.

வயோலா: ஒளியும் பொலிவும் ஒப்பற்ற அழகுமுடைய நங்கையே! உனக்கு வணக்கம். நான் பேசப்புகு முன் நீதானா இவ்விடம் கோயில் கொண்ட இறைவி என்பதை அறிய விரும்புகிறேன்.ஏனெனில், நான் பேச வந்த மொழிகள் வேறெவர் காதிலும் விழத்தகாத பொன்மொழிகள். இதற்குமுன் எவரும் இத்தகைய மொழிகள் கேட்டிரார். இதனை வழுவாது சொல்ல வேண்டுமென்றே திருத்தமுற எழுதிப் பலகால் உருவிட்டுப் படித்து வந்துள்ளேன். ஆதலால் அருள்கூர்ந்து, நான் நாடிவந்த இறைவி நீயே என்பதை வலியுறுத்தக் கோருகிறேன்.

ஒலிவியா: அங்ஙனம் எழுதிப் படித்துப் பேசவருவதற்கு ஈதென்ன நாடக மேடையா? நீர் என்ன நாடகக்காரரா?

வயோலா: நாடகக்காரனல்லேன் ஆயினும், இன்று நடிக்கும் நடிப்பு என்னது அன்றுதான்; நான் என்முன் காண்பது இவ்வீட்டின் இறைவியைத்தானா என்பதைத் தெரிவிக்கும்படி மீண்டும் கோருகிறேன்.

ஒலிவியா: ஆம்; இறைவிதான்.

வயோலா: ஆர்ஸினோவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இறைவிக்கு வணக்கம். இறைவி! நான் வந்த செய்தியைக் கூறுமுன் இன்னொரு நலனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என் போன்றோர் நட்பைத் திறைகொண்ட இறைவனையே