சேக்சுபியர் கதைகள் - 2
235
இஸபெல்: விளங்குமுன் இதற்கு விடைசொல். உனக்கு உயிர் பெரிதா, மானம் பெரிதா?
கிளாடியோ : இதைக் கேட்கவேண்டுமா? மானந்தான் பெரிதென்று நான் நினைப்பேன் என்பது உனக்குத் தெரியாதா?
இஸபெல் : சரி. இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது.என் மானம் நிற்பதானால் நீ இறக்கவேண்டும். களிப்புடன் இறக்கவேண்டும். ஏனெனில். நீ பிழைக்க வேண்டுமானால். அவ்வொன்றையே விலையாகக் கேட்கிறான் அந்த நீசன் ஏஞ்சலோ?
கிளாடியோ: ஆ! அப்படிக் கேட்பானா? கொடியன்! ஆயினும். அதே குற்றத்தின் பகுதியை நானும் செய்திருக்கிறேன். நான் பிழைப்பதனால் ஜுலியட்டுக்கு நான் செய்த தீங்கையும் அகற்றமுடியும். இஸ்பெல்! இருவர் நன்மையை நினைத்தால்-நீ துறவியாகப் போகிறவள் தானே! வெளித் தெரியாத ஒரு தவறுதலை எங்கள் இருவர் நன்மைக்காகக் கடவுள் பொறுக்கமாட்டாரா?
இஸபெல்: அட, கோழை! உன்னை நான் எவ்வளவு பெரிதாக எண்ணினேன்! இன்றிருந்து நாளைப் போகும் உயிரை வெல்லமாகக்கொண்டு உடன்பிறந்தவள் மானத்தை விற்று தின்னப் பார்க்கிறாய்! நீ உண்மையாகவே என் உடன் பிறந்தவனாயிருந்தால், என் மானத்தை இழக்குமுன் இருபது தடவை சாவ அஞ்சியிருக்கமாட்டாய்!
உண்மையாகவே
கிளாடியோ தலைகவிழ்ந்து நின்று, 'இஸபெல், நீ வீர மாது என்று நான் காண்கிறேன்; என் பிழை பொறுப்பாய்' என்றான்.
அச்சமயம் துறவியுருக் கொண்ட தலைவன் வந்து இஸபெலின் வீரத்தை மெச்சி, கிளாடியோவைப் பார்த்து, இத்தகைய தமக்கைக்குத் தகுந்த தம்பியாய் வீரத்துடன் உன் முடிவை ஏற்பாயாக' என்று கூறி அவனை அவன் அறைக்கு அனுப்பினான். அதன்பின் அவன் இஸபெலை நோக்கி, 'இஸபெல், நீ பத்தரைமாற்றுத் தங்கம் போன்றவள். உன் வீரத்தை நான் இன்றுதான் கண்டேன்.நான் சொல்லுகிறபடி நீ நடந்தால் உனக்குத் தீமையில்லாமலே உன் தம்பி பிழைப்பதோடு நீ