உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

அப்பாத்துரையம் – 37

ஒட்டி ரோமியோவும் ஜூலியட்டின் கையைத் தன் கைகளிற் புதைத்துக்கொண்டு அவள் அழகையும் இனிய பாடலையும் பாராட்டிப் பேசுவானாயினான்.

ரோமியோ: உன் உருவமும் பாடலும் நடையும் யாவுமே வானவர்க்குரியன. நீ ஒரு தெய்வமங்கை என நினைக்கிறேன்.

ஜூலியட் : மிகவும் நன்று. அப்படியானால் அத்தெய்வ மங்கையின் கையை மண்ணுலக மாந்தர் கைகொண்டு தீண்டல் பழியன்றோ?

ரோ

ாமியோ

உண்மை, ஆயின் அப்படிக்கேற்ற தண்டனை அதனை முத்தமிடுவதுதான் (என்று கூறிக்கொண்டு அக்கையை முத்தமிடலானான்)

ஜூலியட் : உண்மைப் பற்றுடைய அடியவர் தெய்வ வடிவங்களைத் தீண்டும் உரிமையுடையவரே. ஆனால் அதனை முத்தமிடும் உரிமை உடையவரல்லர்.

இத்தகைய இனிய காதலுரைகளுக்குத் தடையாக ஜூலியட், ஜூலியட்' என்ற ஒரு குரல் கேட்டது. உடனே ஜூலியட். ‘ஆ, என் தாய் அழைக்கிறாள்' என்று கூறிவிட்டு ஓடினாள். ஓடும்போது ஒன்றிரண்டு தடவை அவள் கண்கள் சற்றுச் சாய்வாகத் தன் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றன என்று ரோமியோவுக்குப் பட்டது.

அதன் பின்புதான் அவன், அவள் யார் என்று பக்கத் திலுள்ளவர்களிடம் உசாவினான். உண்மையை அறிந்தபோது அவன் மனம் முதலில் இடிவுற்றது. 'ஆ என்ன செய்தேன்.பகைவர் புலத்துட்பட்ட பாவையிடம் என் உயிரைக் கொண்டு வைத்துவிட்டேனே' எனக் கலங்கினான். ஆனால், காதலைத் தடுத்து நிறுத்தும் வன்மையுடையது எது? பகை, பொறாமை, சிறுமை ஆகிய புயல்களால் மொத்துண்ட வாழ்க்கைக் கடலுக்கு அமைதியளிக்கும் மதியம் அக்காலத்தன்றோ?

மாண்டேகுப் பெருமகனாரின் மகனாகிய ரோமியோ கப்பியூலத்தின் மாளிகையுட் புகுந்து விருந்தில் கலந்து கொண்டதோடன்றி ஜூலியட்டிடம் பேசக்கூடத் துணிவு கொண்டானென்ற செய்தி நகரெங்கும் பரவிற்று. அன்று முழுமையும் தான் கண்ட இளைஞனையும், அவனுடைய காதற்