இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9. வெரோணா நகரின் இரு செல்வர்கள்
(Two Gentlemen of Verona)
கதை உறுப்பினர்
ஆடவர்:
1. புரோத்தியஸ்: வெரோணா நகர் இளைஞன்- ஜூலியாவின் காதலன்.
2. வலந்தைன்: புரோத்தியஸ் நண்பன்-ஸில்வியாவின் காதலன்.மாற்றுருவில் கள்வர் தவைன்.
3. மிலன் நகரத் தலைவன்: ஸில்வியாவின் தந்தை.
4. தூரியோ: மிலன் தலைவனால் ஸில்வியாவுக்குக் கணவனாகத் தேரப்பட்டவன்.
5. எக்ளாமர்: ஸில்வியாவின் நம்பகமான பணியாள்- காட்டிற்கு அவளுடன் சென்றவன்.
பெண்டிர்:
1. ஜூலியா: வெரோணா நகர நங்கை-புரோத்தயன் காதலி மாற்றுருவில்-ஆண்-அவன் பணியாள்.
2. லூஸெத்தா: ஜூலியா தோழி.
3. ஸில்வியா: மிலன் தலைவன் மகள்-வலந்தைன் காதலி.
கதைச்சுருக்கம்
ரு
புரோத்தியஸும் வலந்தைனும் வெரோணா நகரின் இரு செல்வ இளைஞர்கள்; இணைப்பிரியா நண்பர்களும் கூட புரோத்தியஸ் ஜூலியா என்ற நங்கையின் காதலில் ஆழ்ந்து