சேக்சுபியர் கதைகள் - 2
261
அவர்களிடையே கிழவர்களான ரோமியோவின் பெற்றோர்கள் ஒருபுறமும், ஜூலியட்டின் பெற்றோர்கள் ஒருபுறமும் வந்து நின்றனர். அவர்கள் வடித்தக் கண்ணீர் ஆறாகப் பெருகி அவர்கள் பசுமையைக் கருதாது ஒன்றாகக் கலந்தன. இத்தனை நாளாக இரு குடும்பத்திடையேயும் நாயும் பூனையும் போல் சண்டை போட்டுக் கொண்ட அந்தப் பெரிய குடியினர் தம் கான்முறைகள் பலியாயினவென்று கண்டு மனம் வருந்தினர்.
துறவு நடந்ததையெல்லாம் முடிவுவரை எடுத்துக்கூறி, நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது. உங்கள் பகைமை இத்துடனாவது போகட்டும்; உங்கள் பிள்ளைகள் இப்போதும் அவர்கள் காதலின் புகழ் நின்று நிலவும்படி அவர்களை ஒரே கல்லறையிலிட்டு அவர்கள் நினைவுக் குறியாகப் பெரியதொரு மண்டபம் நிறுவுங்கள். கடவுள் அக்காதலர் உயிர்களைக் காத்து உங்களை மன்னிப்பாராக!' என்று கூறி அகன்றார்.
வெரோணா
நகரத்தார் அக்காதலர் நினைவு மண்டபத்தையே நகர மண்டபமாகக் கொண்டு அவர்களைப் போற்றினர்.
அடிக்குறிப்புகள்
1. Verona
2. Capulet
3. Montague
4. Rosaline
5. Romeo
7. Mercutio
9. Tybalt
11. Mantua.
6. Benvolio
8. Juliet
10.Lawrence
12. Count Paris.