உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 37

யை

(260) ||__ ஓராள் மூலமாக ரோமியோவுக்கு அனுப்பினார். அச்செய்தி விரைவில் கொண்டு சேர்க்கும்படி அவர் அத்தூதனுக்கு மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தார். ஆனால், ஊழ்வலியால் அத்தூதன் வழியில் காலந்தாழ்த்தி விட்டான். நல்ல செய்திகளை விடத் தீய செய்திகளே விரைவில் பரவும் என்பதற்கிணங்க, அதற்குள் ஜூலியட் இறந்தாள் என்ற துயர் தரும் செய்தி பரவி ரோமியோவின் காதுவரை எட்டியது. அதுகேட்டு ரோமியோ துடிதுடித்த உள்ளத்தினனாய்த் தலைகால் தெரியாமல் ஓடோடியும் வெரோணாவுக்கு வந்து நகரமக்களால் அவள் இறந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு கல்லறைக்குச் சென்றான். அங்கே அதற்கு முன்னதாகவே ஜூலியட்டைமணக்க எண்ணிய பாரிஸ் வந்து அவள் உடல்மீது மலர் தூவிக் கொண்டிருந்தான். ரோமியோ ஜூலியட்டின் காதலன் என்றறியாது அவள் இறந்தபின் உடலை அவமதிக்க வந்தானென்று நினைத்துப் பாரிஸ் அவனை எ எதிர்த்தான். இருவருக்கும் நடந்த சண்டையில் பாரிஸ் வீழ்ந்திறந்தான். அவன் ஜூலியட்டை மணக்க வந்தவன் என்று கேட்டிருந்த ரோமியோ அவனை வேறிடத்தடக்கம் செய்தபின், ஜூலியட் உடலின் அருகேவந்து நஞ்சுண்டிறந்தான்.

ஜூலியட் மயக்க மருந்தின் வன்மை தீர்ந்தபின் எழுந்து தன் அருகே தன் காதலன் மாண்டு கிடப்பது கண்டாள். அதன் காரணம் என்னவென்று அவளுக்கு விளங்கவில்லையாயினும், அவன் இறந்தான் என்பது மட்டும் கண்கூடாயிற்று. இனி எஃது எப்படியானாலும் என்ன என்று அவளும் அவனருகிற் கிடந்த உடைவாளால் தன் உயிரைப் போக்கிக் கொண்டாள்.

தான் எழுதிய கடிதப்படி ரோமியோ வரக்காலந் தாழ்த்தது கண்டு, துறவி நேராகத் தாமே கல்லறை எய்த ஜூலியட்டைக் கூட்டிப் போகலாம் என்று வந்தார்; வந்து அங்கு நடந்த காட்சிகளைக் கண்டு, துறந்த மனமும் துடிக்கக் கண்கலங்கினார். அதற்குள்ளாக ரோமியோவும் பாரிஸும் கல்லறைப் பக்கம் போவது கண்ட சிலர் என்ன நேருமோ என அஞ்சிப் பின் வந்தனர். அவர்களும் இக்காட்சியைக் கண்டு திகைத்து நாலாபுறமும் சென்று புலம்பினர். அரை நாழிகைக்குள் நகர மாந்தர் அனைவரும் தலைவரும் கல்லறை வந்து சேர்ந்தனர்.