உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

259

இப்போது அவள் அமைந்த முகத்துடன் விளங்குவது கண்டு வியப்படைந்தனர். 'பாரிஸை நேரில் கண்டபின் வந்த மாறுதல் இது. ஆளை அறிவதன் முன் காதல் கொள்வதெங்ஙனம்' என அவர்கள் மனந்தேறினர். பாரிஸினிடம் அவள் மணப்பெண் மாதிரி நடக்கவில்லையாயினும், நெடுநாள் பழகிய உறவினரிடம் நடந்துகொள்வது மாதிரி நடந்து கொண்டாள். சூதொன்று மறியாத பாரீஸ், 'காதலென்றும் அறியாத சிறுபெண்தானே' என்று நினைத்தான்.

மணநாளைக்கு முந்திய இரவில் ஜூலியட் மருந்தை உட்கொண்டாள். விடியுமுன் எழுந்து தோழியரும் தாயும் அவளை எழுப்பி மணப்பெண்ணுக்குரிய வாழ்த்துக் கூற வந்தனர். அவர்கள் கண்ட காட்சியையும் அவர்கள் அடைந்த திகிலையும் யாரோ மதிப்பிடக்கூடும்? அழகே வடிவெடுத்த அவள் வடிவம் தந்தத்தால் கடைந்தெடுக்க பாவைபோல் கிடந்தது. நெடுநேரம் உடலையசைத்தும், ஓசையுண்டு பண்ணியும், உருட்டிப்புரட்டிப் பார்த்தும் பயனில்லாது போகவே இறந்தாள் என்று கருதிக் கதறினர். பெண்ணழைக்க வந்த மணமகன் பாரீஸ் அவ்வொலி கேட்டுக் கலங்கி ஓடிவந்து பார்த்தான். பார்த்து அவனும் இடியொலி கேட்ட அரவம்போல் மெய்ம்மறந்து அவள் அருகில் வீழ்ந்து புரண்டான். மன்றங்கறங்க மணப்பறை ஒலிக்க வேண்டிய அன்றே பிணப்பறை ஒலிக்கலாயிற்று.

சுற்றத்தினரும் நண்பரும் நகர மக்களும் அழுதரற்ற ஜூலியட்டின் உடலம் நகர்ப்புறத்துள்ள கப்பியூலத்துக் குடியினரின் கல்லறையிற் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது. அதற்குச் செய்யவேண்டும் கடமை களனைத்தும் நிறைவேற்றிய பின் ஒருவர் பின் ஒருவராகக் கலைந்தனர். ஜூலியட்டின் தாய்தந்தையர் கோவெனக் கதறிய வண்ணமே அங்கு நின்றும் இழுத்துச் செல்லப்பட்டனர். பாரிஸ் உணர்வற்ற நிலையில் கொண்டு போகப்பட்டான். ஜூலியட் உணர்வற்ற நிலையில் தனியே அக்கல்லறையுட்கிடந்தாள்.

இதற்கிடையில் துறவியாகிய லாரென்ஸ் புதிதாக ஏற்பட்ட நிலைமையினையும் அதனால் நேர்ந்த இக்கட்டையும், அதனை மாற்றத் தான் செய்த சூழ்ச்சினையும், இனிச் செய்ய வேண்டும் காரியங்களையும் பற்றி விவரமாக எழுதிய கடிதமொன்றை