(258
அப்பாத்துரையம் – 37
அவர்கள் நெடுநாள்
அதற்கேற்றபடி, மனத்திற்குள் அவளுக்கேற்றவனென்று நினைத்திருந்த 12கவுண்ட் பாரிஸ் தானாகவே அவளை மணம் செய்து கொள்ள விரும்பிக் கடிதம் எழுதினான். அது கண்டு மகிழ்ந்து உடன் தாமே அவன் விருப்பத்திற்கு உடன்பட்ட தோடன்றி விரைவிலேயே மணநாளையும் குறிப்பிட்டனுப்பினர்.
கவுண்ட் பாரிஸ் ஜூலியட்டை ஒத்த பெண்கள் விரும்புந் தலைவன் என்பதில் ஐயமில்லை. ஆனால் ரோமியோவினிடமே மனம் வைத்து அவன் மனைவியாய் விட்ட ஜூலியட் அவனை மணப்பதெங்ஙனம்? தன் மனத்தை வெளியிட்டுச் சொல்லி மறுத்துவிடலாமா என்று நினைத்தாள். எதற்கும் தனக்கும் தன் ரோமியோவுக்கும் உற்ற நண்பரான துறவியினிடம் சென்று அவரது அறிவுரையைப் பின்பற்றுவோம் என்றெண்ணினாள்.
ஜூலியட்டின் மணச்செய்தியை இப்போது வெளியிடுவ தானால் நன்மை விளையாது என்று லாரென்ஸ் எண்ணினார். ஆனால், நிலைமையோ முற்றிவிட்டது. தப்ப வழி வேண்டும். அவர் மனத்தில் ஓர் அரிய எண்ணம் தோன்றியது. அதனைச் செய்துமுடிக்க வீரமும் துணிவும் வேண்டும் என்று அவர் ஜூலியட்டினிடம் கூறினார். ஜூலியட், ‘என் காதலனுக்காக நான் எதனையும் துணிந்து செய்வேன். என்னை நம்பலாம். தங்கள் எண்ணத்தை வெளியிடுக' என்றாள். அவர் அவள் கையில் மயக்க மருந்து ஒன்றைக் கொடுத்து, 'இதனை உட்கொண்டோர் நாற்பத்திரண்டு மணிநேரம் இறந்தவர் போல் கிடப்பார். பின் உயிர் மீண்டார்போல் எழுந்திருப்பர். இதனை மணநாளின் முன் நீ உட்கொண்டால் இறந்தவள் போல் கிடப்பாய். பெற்றோரும் உற்றோரும் உன்னை இறந்தவள் என நினைத்து, உங்கள் குடும்பத்தாருக்குரிய கல்லறையில் கொண்டு அடக்கம் செய்வர். அதற்குள் ரோமியோவுக்கு நான் கடிதம் எழுதி வரவழைத்து உன்னை அழைத்துப் போகச் செய்வேன். அதன்பின் மணவினையை நான் வெளியிடும் வாய்ப்பு நேர்ந்தபோது நீங்கள் வெளிப்படலாம்' என்றார். ஜூலியட் மகிழ்ச்சியுடனும், துணிவுடனும் இவ்வேற்பாட்டுக்கிணங்கினாள்.
முதன்முதலில் பாரிஸை மணக்கவேண்டுமென்று பெற்றோர் சொன்னபோது அவள் முகம் கோணியது கண்டவர்,