உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இரண்டாம் ரிச்சர்டு மன்னன்

King Richard II

கதை உறுப்பினர்

ஆடவர்:

1. இரண்டாம் ரிச்சர்டு மன்னன்: பேரரசன் மூன்றாம் எட்வர்டின் பேரன்-அவன் மூத்த மகனாகிய எட்வர்ட்இளவரசன் மகன்-தனி மனிதன் என்ற முறையில் அன்பும், பெருமிதமும், நல் உணர்ச்சிகளும் உடையவன்-அரசன் என்ற முறையில் தன்னாண்மையும்,பண ஆர்வமும், பெருங்கடி மக்களை அடக்கி ஆளும் தன்மை உடையவன்.

2. ஜான் ஆவ் காண்டு: அரசன் மூத்த சிற்றப்பன்-அரசியல் திறமுடையவன்-நாட்டுப் பற்றுடையவன்-கண் கண்டது சொல்லி முதுமையில் அரசன் அவமதிப்பைப் பெற்றவன்.

3. கிளஸ்டர் கோமகன்: அரசன் சிற்றப்பன்-ஜான் ஆவ்காண்டு தம்பி-அரசன் எதிர்த்தனால் அரசன் தூண்டுதலால் கொல்லப்பட்டவன்-அரசன் அழிவுக்கு விதையாய் அமைந்தது

இக்கொலை.

4. யார்க் கோமகன்: அரசனது இன்னொரு சிற்றப்பன்- அவன் சொல் பொறுத்தும் பணிந்து கொடுத்தவன்-கோழை- ஹென்றியை எதிர்க்கவும் துணியாது விட்டுக் கொடுத்தவன்.

5. ஹென்றி ஹெரிபோர்டு: பாலிங் புரோக் கோமகன்- லங்காஸ்டர் பெருமகன்-பின் நான்காம் ஹென்றி அரசன்; ஜான் ஆவ்காண்டின் மகன்-அரசனை நயமான முறையில் எதிர்த்து வெற்றி பெற்று, நான்காம் ஹென்றி அரசன் ஆனவன்.