சேக்சுபியர் கதைகள் - 2
277
கதைச் சுருக்கம்
இரண்டாம் ரிச்சர்டு மன்னன் இன்ப வாழ்வினன்; சோம்பேறி; ஆனால் பண ஆவலும் தன்னாண்மையும் மிக்கவன். பெருமக்கள் அவனை வெறுத்தனர். அவன் செயலைக் கண்டித்த அவன் சிற்றப்பனாகிய கிளஸ்டர் கோமகனை மறைவாக அவன் கொலை செய்வித்தான். அவன் உடன்பிறந்தாராகிய யார்க் கோமகனும், ஜான் ஆவ்காண்டும் வெறுத்தும் வெளியிட்டுச் சொல்லாதிருந்தனர். ஜான் ஆவ்காண்டின் மகன் ஹென்றி ஹெரிபோர்டு ரிச்சர்டுக்கு உடந்தையாய் நின்ற கிளஸ்டரைக் கொன்ற நார்க்போக் கோமகன் மீது வழக்காடினான். இருதிறத்தாரும் பத்தாண்டு நாடு கடத்தப்பட்டனர். ஹென்றி ஹெரிபோர்டின் தண்டனை குறைக்கப்படும் அதே கவலையால் முதியவனான ஜான் ஆவ்காண்ட் இறந்தான்.
இறக்கும்போதும் அரசன் ஜான் ஆவ்காண்டை அவமதித்ததுடன் பண ஆவலால் அவனுரிமையையும் செல்வத்தையும் பறித்தெடுத்தான். இதனை வைத்து ஹென்றி ஹெரிபோர்டு இங்கிலாந்தில் ஒரு பிரெஞ்சுப் படையுடன் இறங்கினான். அச்சமயம் அயர்லாந்து சென்றிருந்த அரசன் எதிர் காற்றினால் திரும்பி வரத் தாமதமாக, ஹென்றியுடன் நார்தம்பர்லந்து கோமகனும் வொர்ஸ்டர் பெருமகனும் சேர்ந்தனர். யார்க் கோமகனும் ஹென்றிக்கு நண்பனாயினன்.
கடைசியாக ரிச்சர்டு இங்கிலாந்து வந்திறங்கினான்.நாட்டு நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறிந்து மனங் கலங்கினான்.
ஹென்றியும் தந்தையிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாலிங் புரூக் நிலக்கிழமையைத் தனதாக்கியதோடு அரசனைப் போலவே விளங்கிப் படையுடன் மேற் சென்று கொண்டிருந்தான்.
பாலிங் புரூக்கை நோக்கி வந்துகொண்டிருந்த ரிச்சர்டு நண்பருடன் பிளின்ட் கோட்டையருகில் வந்ததும், ஹென்றி படையுடன் அண்மையிலேயே வருகிறானென்று கேள்வியுற்று தங்கினான். கின்னேரத்தில் நார்தம்பர்லந்து ஹென்றியின் தூதனாக வந்து ஹென்றிக்கு நீதி வழங்க வேண்டுமென்று கூறினான்.
அக்கோட்டையிலேயே