உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

அப்பாத்துரையம் - 37

இத்தோட்டத்தை மெச்ச நேர்ந்திருப்பின் எத்தனையோ நலமாயிருந்திருக்கும்" என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

தோட்டத்தைக் காக்கும் முறையில் தனக்கிருக்கும் திறன் இங்கிலாந்தைக் காக்கும் முறையில் ரிச்சர்டுக்கு இல்லை என்று அத் தோட்டக்காரன் கூறிய குறிப்பைக் கேட்டு முதலில் கனன்றெழுந்த அரசி, கணவனுக்கு ஏதோ தீங்கென உள்ளூரக் கண்டதன் பயனாகத் தோட்டக் காரனை அணுகி, “நேயனே, அரசன் அயல்நாடு சென்று பல நாளாகியும் வரக்காணேன்; கவலைப்படுகிறேன்; அவன் அரசியலுக்கு ஊறு நேர்ந்ததெனக் கண்டால் எனக்குக் கூறுவாய்” என்றாள்.

தோட்டக்காரன் தன் புன்மொழிகள் இங்ஙனம் எதிர்பாராத பெரிய இடத்தைச் சென்று சேர்ந்ததே என வருத்தமும் வெட்கமும் அடைந்தான். பின் அரசியின் முகநோக்கி ஆண்டு அரசியல் பெருமைக்கு மாறாகப் பெண்மையின் மெல்லியல்பும் கவலையும் குடிகொண்டிருக்கக் கண்டு பரிவுற்று, ஹென்றி ஹெரிபோர்டு படையுடன் வந்திருப்பதை நார்தம்பர்லந்து முதலியோர் எதிரிபக்கம் சேர்ந்திருப்பதையும் விளங்கக் கூறினான். கேட்ட அரசி தீக்காற்று வீசப் பெற்ற மாந்தளிரெனச் சாம்பத் தலைப்பட்டாள்.

3. அலைமேல் அலை

அயர்லாந்திலிருக்கும் ரிச்சர்டுக்கு இச்செய்திகளின் முழு விவரமும் எட்டவில்லையாயினும் நிலைமை நெருக்கடியானது என்ற அளவிலேனும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. காற்று தொடர்ச்சியாகப் பல நாட்கள் இங்கிலாந்தினின்று அயர்லாந்து நோக்கி அடித்ததினால், இச்செய்திகள் இங்கிலாந்தினின்று அயர்லாந்து வந்து சேர்ந்தும் ரிச்சர்டு அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து வரமுடியாமலிருந்தது. இக்கால தாமதத்தால் ஒவ்வொரு நொடியும் ஹென்றியின் வலிமை வளர்ச்சியடைந்ததும் ரிச்சர்டின் வலிமை குன்றியும் வந்தன. ரிச்சர்டு இங்கிலாந்தில் வந்திறங்கியபோது, தீச்செய்திகள் பல அவன் காதில் வந்துவிழக் காத்திருந்தன. அவற்றுள் முதன்மையானது வேல்ஸில் ஸாலிஸ்பரி தலைமையிலுள்ள படைகள் கலைந்து போயின என்பதே. அவற்றிடையே ரிச்சர்டு இறந்து போனான் என்ற