உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வெனிஸ் வணிகன்

(The Merchant Of Venice)

1. பஸானியோ கடன் கேட்டல்

இத்தாலி நாட்டின் பெரிய நகரங்களுள் வெனிஸ்' என்பது ஒன்று. அக்காலத்தில் யூதன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ஷைலாக்?. அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மிகக் கொடியவை. அவன் கிறித்துவ வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்து கடுவட்டி வாங்கி, பெருஞ்செல்வம் திரட்டினான். அவனுடைய கொடுமையான முறைகளையும், கல் நெஞ்சையும் பலரும் வெறுத்தனர்.

அந்நகர வணிகருள் அந்தோனியோ' என்னும் செல்வன் ஒருவன்; அவன் ஈகையும் இரக்கமும் உடையவன்; ஏழைகளுக்கு உதவி செய்யும் உயர்ந்த பண்பு வாய்ந்தவன். யாரேனும், தன்னிடம் கடன் கேட்டால், அவன் வட்டியில்லாமல் கடன் கொடுத்து வந்தான். இதனால், ஷைலாக் அவன்மீது பொறாமையும் உட்பகையும் கொண்டான். அவனும் ஷைலாக்கைக் கண்டபோ தெல்லாம் இகழ்ந்து பேசினான். “ஷைலாக் நீ பெரிய பாவி. ஏழைகளிடம் இரக்கம் கொள்ளாத நீ இருந்தால் என்ன; இறந்தால் என்ன?" என்று பலமுறை வெகுண்டு கூறினான். இவற்றை ஷைலாக் பொறுத்துக் கொண்டிருந்தபோதிலும், பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று உள்ளத்தில் உறுதிகொண்டிருந்தான்.

அந்தோனியாவுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் 'பஸானியோ. இவன் பெருமை மிகுந்த நற்குடியில் பிறந்தவன். பெற்றோர் வழியாகப் பெற்ற செல்வம் அவனுக்குப் போதவில்லை. வரவுக்கு மிஞ்சிய செலவாளிக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் என்ன பயன்? ஆனால், பஸானியோ