உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அப்பாத்துரையம் - 37

தீயவழியில் பொருட்செலவு செய்து காலங்கழிப்பான் அல்லன். நண்பர் பலருடன் கூடிக் களிப்பதிலும், ஆடம்பர வாழ்க்கை நடத்துவதிலும் அவன் விருப்பம் மிகுந்தவன். எனவே, உள்ள பொருள் எல்லாம் விரைவில் அழியவே. அவன் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடன் வாங்குவதற்காக, பஸானியோ அங்கும் இங்கும் அலைந்தான் அல்லன்; பணம் வேண்டிய போதெல்லாம் அந்தோனியாவை அண்டினான். பஸானியோ மனம் மகிழ்ந்தால் போதும் என்ற ஓரெண்ணத்துடன், அந்தோனியோவும் வரையாது கொடுத்து வந்தான். இருவருக்கும் மனவேறுபாடு ல்லாதது போலவே, பண வேறுபாடும் இல்லை.

ஒருநாள் பஸானியோ மூவாயிரம் பொன் கடன் கேட்பதற் காக அந்தோனியோவிடம் வந்தான். அப்போது தன் உள்ளத்தில் இருந்த ஓர் எண்ணத்தையும் வெளியிட்டான். “நண்பா! எனக்கு நல்ல காலம் பிறப்பதாகத் தெரிகிறது. ஒரு பணக்காரப் பெண்ணை மணம் செய்து கொள்ள எண்ணுகிறேன். அவள் பெயர் போர்ஷியா. அவளுடைய தந்தையார் இறந்து விட்டார். அவர் பெரிய செல்வர். அவருக்குப் பின் போர்ஷியாவே அச்செல்வத்திற்கு உரிமை உடையவள். அவர் வாழ்ந்த காலத்தில் நான் அடிக்கடி சென்று பழகினேன். நான் அவளை விரும்புவதுபோலவே, அவளும் என்னை விரும்புவாள்.அவளை மணம் செய்து கொண்டால், என் குறை எல்லாம் தீரும். நான் செல்வன் ஆவதற்கும், கடனைத் தீர்ப்பதற்கும் இஃது ஒன்றே வழி. இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால், இப்போது நீ உதவி செய்தல்வேண்டும். எனக்கு மூவாயிரம் பொன் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கொடுத்தால்,அவளுடைய செல்வநிலைக்கு ஏற்ற நடையுடை பாவனையோடு சென்று நான் முயற்சி செய்தல் கூடும். இதுவரைக்கும் பலவகை உதவிகள் செய்து என்னைக் காத்ததுபோலவே, தக்க சமயமாகிய இப்போதும் இந்த உதவியைச் செய்வாய் என்று வந்தேன்," என்று பஸானியோ கூறினான்.

இல்லை என்னாது கொடுத்து உதவிவந்த அந்தோனி யோவிடம் அப்போது பணமில்லை. சரக்கு ஏற்றிக்கொண்டு திரும்பிவருகின்ற கப்பல்களை அவன் எதிர் நோக்கியிருந்தான்.