உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

9

தன்னுடைய கப்பல்கள் திரும்பி வந்தவுடன் பணத்துக்குக் குறை வில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அவன் பஸானியோவுக்கு ஒரு வழி கூறினான்.“என்னுடைய கப்பல்கள் விரைவில் திரும்பும்;. திரும்பிய பிறகு, எவ்வளவு பொன் வேண்டு மானாலும் பெறமுடியும். ஆனால், நீ சொல்லுவதைக் கருதினால், அதுவரைக்கும் பொறுத்திருத்தல் முடியாது என்று தெரிகிறது. இரக்கம் என்பது இன்னது என்று அறியாத ஷைலாக்கிடம் எந்நாளும் பணம் கிடைக்கும்.அவனிடம் செல்வோம். கப்பல்களை ஈடுகட்டிக் கடன் கேட்போம். அவனும் வட்டி என்றால் வாய் திறப்பான்; தயங்காமல் கொடுப்பான்" என்று அந்தோனியோ கூறினான்.

-

2. ஷைலாக் கடன்தரல்

இருவரும் ஷைலாக்கிடம் சென்றனர்; கடன் கேட்டனர். "இந்தப் பயல் அந்தோனியோ இப்போது அகப்பட்டுக் கொண்டான்" என்று ஷைலாக் மனத்தில் எண்ணினான். “வட்டியில்லாமல் கடன் கொடுத்து நம்முடைய வருவாயைக் கெடுக்கிறவன், யூதர் என்றால் வெறுத்துப் பேசுகிறவன்; கண்ட விடத்தில் எல்லாம் என்னைப் பழித்து இகழ்கிறவன்; இவனை வாளாவிடல் கூடாது; பழிக்குப்பழி வாங்குவேன்” என்று பலவாறு நினைத்துக்கொண்டே பேசாமல் இருந்தான். அந்தோனியோ மீண்டும் கேட்டான். அப்போது, ஷைலாக் அவனை நோக்கி, 'ஐயா, நாய் என்றும், பேய் என்றும் என்னை இகழ்ந்து பேசிய நாவால் இப்போது கடன் கேட்கிறாய். யூத வகுப்பார்க்குப் பொறுமை இயற்கை; நானும் எவ்வளவு பொறுத்துக் கொண்டிருந்தேன்! போன வாரத்தில் என்மீது துப்பினாய்; என்னைப் பாவி என்று பழித்தாய். இந்த வாரத்தில் கடன் கொடு என்று கேட்கின்றாய். இது நன்றாய் இருக்கின்றது அன்றோ?" என்று கூறினான்.

து

“ஷைலாக்! இப்போது உன்னிடம் வணங்கி வந்திருக்கிறேன் என்று நினைக்கவேண்டா. இனியும் நான் உன்னை வெறுப்பேன்; இகழ்வேன்; பழிப்பேன்; எல்லாம் செய்வேன். உனக்கு விருப்பம் இருந்தால், கடன்கொடு; நண்பனுக்குக் கொடுப்பதுபோல் கொடுக்காதே; பகைவனுக்குக் கொடுப்பதுபோல் கொடு. நான்