உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

301

ரிச்சர்டின் ஆட்சி முடிவு கேட்டுப் பொதுமக்களிற் பலர் வியப்புற்றனர். அவன் ஆட்சியின் குறைபாடுகளை நன்கு உணர்ந்தவர்கள்கூட, அவன் ஆட்சி முடிவு ஏற்புடைய தன்றெனக் கொண்டனர். ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்றபடி பெருமக்களும், இன்ப வாழ்வும் தற்பொருமையுடைய ரிச்சர்டின் குற்றங்கள், தன்னலமே நோக்கமாகக் கொண்ட ஹென்றி ஆட்சியின் குற்றங்களைப் பார்க்கினும் எவ்வளவோ மேல் என்று எண்ணினர்.

ரிச்சர்டுக்கு உட்பகையாய் நின்ற யார்க் கோமகன் மகன் ஆமெர்ல பெருமகன் தலைமையில் பல பெருமக்களும், பொதுமக்களும் சேர்ந்து, திரும்ப ரிச்சர்டை அரசனாக்கும் எண்ணத்துடனும் சூழ்ச்சி செய்தனர். ரிச்சர்டுக்கு வஞ்ச மிழைத்த யார்க், மைந்தனையும் மனைவியையும் கூடக் காட்டிக்கொடுத்து நல்ல பெயரெடுக்க முயன்றான்.

ஹென்றியின் சமய சஞ்சீவிகளில் ஒரு மூவர் யார்க்கைவிட ஒருபடி முன் சென்று சிறையிலிருந்த ரிச்சர்டை வலியச் சண்டைக்கிழுத்துப் படுகொலை செய்தனர்.

தன்னலத்திற்காக ரிச்சர்டிற்கு எதிராக அனைவரையும் தூண்டி ஹென்றி, ரிச்சர்டின் பெருந்தன்மையினையும், அவனுக்கெதிராகத் தன் தூண்டுதலுக்கிணங்கிய வஞ்சகர்களின் சிறுமையையும் உள்ளபடி உணர்ந்து ரிச்சர்டை மனமாரப் புகழ்ந்து. அவன் கொலைஞர்களைத் தூக்கலிட்டான். ஹென்றியின் குற்றங்களை இச்செயல் ஒருவாறு பொது மக்கள் முன்னிலையில் கழுவிற்று என்னலாம்.

இதே காரணத்தால் அவன் யார்க் கோமகன் சொற்கேளாது அவன் மனைவி மக்களை மன்னித்து விட்டான். யார்க்கின் கோழைத்தனமான நட்பை விட, அவர்களது வீரஞ்செறிந்த பகைமை நல்லதெனக் கொண்டான். அதற்கேற்ப, அவர்களும் ரிச்சர்டிடம் காட்டிய உண்மையினை அவனிடமுங் காட்டினர்.

ஹென்றி இங்ஙனம் ரிச்சர்டுக்குத் தன்னலத்தால் தான் இழைத்த தீங்கைச் சரிசெய்ய எண்ணியும், ரிச்சர்டின் புகழும் வஞ்சினமும் அவன் வாழ்க்கையை வாள்போல் ஈர்த்தன.