உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

47

சேர்ந்து கொண்டாராம்," டாராம்," என்று தெரிவித்தான். உடனே, மாக்பெத் வெகுண்டெழுந்தான்: மாக்டெப் வாழ்ந்த அரண்மனைக்குச் சென்றான். அங்கிருந்த அவனுடைய மனைவி மக்களைக் கொன்றான்: உறவினர் பலரையும் கொன்றுவிட்டான்.

மாக்பெத் கொண்ட கொலை வெறியைக் கண்ட தலைவர்கள் அவனை வெறுத்தார்கள். அவர்களுள் பலர் இங்கிலாந்துக்கு ஓடிச் சென்று மால்கமுடன் சேர்ந்து கொண்டனர்; நாட்டில் இருந்த ஏனையோரும் மாக்பெத்துக்குக் கீழ்படிவது போல் நடித்து, உள்ளத்தில் வெறுத்தனர்: “மால்கம் வெற்றி பெற்று முடி சூடும் திருநாள் என்று வருமோ?" என்று எண்ணிக் காத்திருந்தனர். மாக்பெத் கொடுங்கோல் மன்னனாக நாட்டை ஆண்டுவந்தமையால் குடிகள் எல்லோரும் அவன் அழியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

மாக்பெத் பிறர்க்குச் செய்த தீவினை எல்லாம் அவனையே சூழ்ந்து வருத்தத் தொடங்கின. அவன் தன் நிலையை அறிந்து தன்னை வெறுத்துக் கொள்ளத் தொடங்கினான். தான் கொன்ற டன்கன் அரசன் துன்புறவில்லை என்றும், பகையும் பழியும் பயமும் தன்னைச் சூழ்ந்து வருத்துதலால் தானே துன்புறுகின்றவன் என்றும் அறிந்து துயருழந்தான். “டன்கன் மன்னனே! உன் நிலையே சிறந்தது. எத்தகைய படையும் இப்போது உன்னை என்ன செய்ய இயலும்? என்னை எல்லாம் துன்புறுத்துகின்றனவே! உன்னைக் கொன்ற நன்றி கொன்ற பாவியாகிய நான்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றேன்,” என்று நினைத்து வருந்தினான்.

மாக்பெத்துக்குத் துணையாயிருந்த டன்கன் அரசனைக் கொல்வித்த அவன் மனைவியே அவன் வருந்திய போதெல்லாம் தேற்றி வந்தாள்; அவன் கனாக்கண்டு அலறியபோதெல்லாம் அவனுடைய நடுக்கத்தைப் போக்கி வந்தாள்; இரவிலும் பகலிலும் அவனுடைய கவலை எல்லாவற்றையும் போக்கி ஊக்கம் அளித்து வந்தாள். அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. தன்னை எல்லோரும் வெறுப்பதை அறிந்தவுடன் அவள் தற்கொலை செய்து கொண்டாள். மாக்பெத் அரசன் உற்ற வருத்தத்திற்கு எல்லை இல்லை மனைவி தவிர வேறொரு துணையும் இல்லாதவனாய் வாழ்ந்த அவன் சோர்ந்தான்.