உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அப்பாத்துரையம் - 37

2. இளவரசனைக் காணுதல்

இவ்வாறு பிராஸ்பிரோ சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஏரியல் வந்தான்; புயற்காற்றைப் பற்றியும், கப்பலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தியதைப் பற்றியும் தன் தலைவனிடம் சொல்லும் பொருட்டு வந்தான். ஆவியுருவம் மிராந்தா கண்ணுக்குப் புலப்படாது.என்றாலும், ஏரியலுடன் தான் பேசுவதை வெட்ட வெளியுடன் பேசுவதாக எண்ணி அவள் வியப்படைவாள் என்று பிராஸ்பிரோ கருதினான்; ஆதலால், தன் மகளை மந்திரக் கோலினால் மெல்லெனத் தொட்டான். உடனே அவள் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

66

"அஞ்சாமையுள்ள ஏரியலே! உன் வேலையைச் செய்து முடித்தாயா?” என்று பிராஸ்பிரோ கேட்டான்.

புயலைப் பற்றியும் கப்பற்காரர் நடுக்கத்தைப் பற்றியும் ஏரியல் விரிவாக எடுத்துக்கூறினான்; 'நேபல்ஸ் அரசன் மகன் பெர்திநந்து முதலில் கடலில் குதித்தான்; தன் மகனைக் கடல் அலைகள் விழுங்கின என்று அவன் தந்தை வருந்தினான். ஆனால், அவனுக்கு ஒரு தீங்கும் இல்லை; இத்தீவின் ஒரு மூலையில் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் தந்தை கடலில் மூழ்கிவிட்டிருப்பான் என்று வருந்திக் கொண்டிருக்கிறான். அவனுடலில் ஒரு மயிரிழைக்கும் கெடுதி நேரவில்லை. அவனுடைய சிறந்த உடைகள் நீரில் நனைந்த போதிலும் முன்னிலும் பொலிவாக விளங்குகின்றன,” என்று சொன்னான்.

பிராஸ்பிரோ: நன்று, நன்று. அந்த இளவரசனை அழைத்துக் கொண்டுவா. என் மகள் அவனைப் பார்க்க வேண்டும். அரசன் எங்கே? என் தம்பி எங்கே?

ஏரியல்: இளவரசனை அவர்கள் தேடிக் கொண்டிருக் கிறார்கள். ஆயினும், அவனைக் கண்டுபிடிக்கும், நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. கப்பற்காரர் ஒருவரும் மாயவில்லை. அவர்கள் தனித்தனியாகச் சிதறி யிருப்பதால், ஒவ்வொருவரும் தாம் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாக எண்ணுகிறார்கள்.கப்பல் அவர்களுக்குக் காணாமற் போயினும், துறைமுகத்தில் தீங்கின்றி இருக்கிறது.