உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

59

பிராஸ்பிரோ: ஏரியல்! நீ உனக்கிட்ட வேலையைச் செய்து விட்டாய். இன்னும் செய்யவேண்டிய வேலை உள்ளது.

ஏரியல்: இன்னுமா வேலை இருக்கிறது? தலைவரே! என்னை விடுதலை செய்வதாக வாக்களித்திருக்கிறீர். அதை உமக்கு நினை வூட்டுகிறேன். இது வரைக்கும் நான் உண்மையாக ஊழியம் செய்து வந்தது உமக்குத் தெரியும். நான் பொய் சொன்னதில்லை; தவறு இழைத்ததில்லை; வெறுப்பு இல்லாமலும் முணுமுணுக்காமலும் இட்ட வேலையைச் செய்து வந்திருக்கிறேன்.

பிராஸ்பிரோ:அப்படியா? உன்னை எப்படிப்பட்ட துன்பத் திலிருந்து விடுவித்தேன் என்பதை நீ நினைத்துப் பார்க்கவில்லை. வயது முதிர்ந்த கூனி-கெட்ட பொறாமை குடிகொண்டவள் கொடிய மாயக்காரி - சிகோராக்ஸ் என்பவளை நீ மறந்து விட்டாயோ! அவள் பிறப்பிடம் எது? சொல்.

ஏரியல்: ஐய! அவள் பிறந்த இடம் ஆர்ஜியர்.

பிராஸ்பிரோ: அங்கேயா பிறந்தாள்? அவளிடம் நீ கட்டுப் பட்டிருந்த நிலைமையை மறந்துவிட்டிருக்கிறாய். அதைச் சொல்லுகிறேன், கேள். அங்கே அவள் இருந்தபோது அந்தக் கெட்ட மந்திரக்காரி கொடிய சூனியங்களைச் செய்தாள். அவற்றைக் கேட்கவும் மனம் பொறாது. அதனால் அங்கிருந்தோர் அவளைத் துரத்தினர். கப்பற்காரர் அவளை இங்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அவளுடைய கொடிய ஏவல்களை நிறைவேற்றும் வன்மை உனக்கு இல்லை. ஆகையால் உன்னை ஒரு மரத்தில் பிணித்திருந்தாள். நீ அங்கே ஊளையிட்டுக்கொண்டிருந் தாய். அப்போது நான் உன்னைக்கண்டு, அத்துன்பத்திலிருந்து விடுவித்தேன். அதை இப்போது நினைத்துப்பார்.

ஏரியல்: அன்புள்ள தலைவரே! என்னை மன்னித்தருள்க. நான் உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன்.

இவ்வாறு ஏரியல் சொல்லித் தன் நன்றிகெட்ட தன்மைக்காக நாணமுற்றான். இன்னும் சில வேலைகளைச் செய்து முடித்தபின் அவனுக்கு விடுதலை அளிப்பதாகப் பிராஸ்பிரோ கூறினான்; இனி, என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தான்.