60
அப்பாத்துரையம் - 37
ஏரியல் உடனே அங்கிருந்து புறப்பட்டு, பெர்தி நந்தை நாடிச் சென்றான். பெர்திநந்து முன் இருந்த இடத்திலேயே அதே துயரக் கோலத்துடன் புல்தரையின்மீது உட்கார்ந்திருக்கக் கண்டான். “ஐயா! இளந்தலைவரே! உம்முடைய அழகிய வடிவத்தை மிராந்தா அம்மையார் பார்க்க வேண்டுமாம். அதற்காக நீர் இப்போது வரவேண்டும். என்னைத் தொடர்ந்து வருக!" என்று ஏரியல் அவனிடம் கூறி, பின்வருமாறு பாடத் தொடங்கினான்:-
அரசிளங் குமர அன்புடன் கேளாய் பரவுறு தந்தை பரவையின் அடியில் ஆழ்ந்ததோர் இடத்தில் அமைந்தே உள்ளான் ஆழ்ந்தனன் என்றே அலமரல் ஒழிக பண்பமை எலும்புகள் பவழமே ஆயின கண்கள் இரண்டும் கருதரும் முத்தே யாக்கையின் உறுப்பு யாவும் அழிந்தில போக்கறு கடல்விளை பொருள்கள் ஆயின அன்னவன் மறைய அக்கடல் வாழும் கன்னியர் அடிக்கடி கனமணி அடித்தல்
கேட்டறி திலையோ டொண் டொண்
கேட்குமவ் வொலியே கேட்குமால் எனக்கே.
ஏரியல்
இவ்வாறு
இறந்த தந்தையைப் பற்றி கூறக்கேட்டதும், பெர்திநந்து தன் கலக்கத்தைவிட்டொழித்தான்; ஏரியலின் குரல் ஒலியைத் தொடர்ந்து பின்பற்றிச் சென்று ஒரு பெரிய மரத்தை அடைத்தான். அம்மரநிழலில் பிராஸ்பிரோ தன் மகளுடன்
உட்கார்ந்திருந்தான். தன் தந்தை தவிர வேறொருவரையும் மிராந்தா இதற்கு முன் கண்டதில்லை.
அப்போது, பிராஸ்பிரோ தன் மகளை நோக்கி, “மிராந்தா! நீ அங்கே பார்ப்பது எதனை?” என்று கேட்டான்.
மிராந்தா மிக்க வியப்படைந்து, “தந்தையே! உண்மையில் அஃது ஓர் ஆவியே! அஃது அழகானதோர் உயிர் என்பதில் ஐயம் ல்லை. அஃது ஓர் ஆவியே அன்றோ?" என்றாள்.