உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

66

61

'அன்று, அன்று அஃது உண்ணும், உறங்கும், நமக்கு இருப்பன போல அதற்கும் புலன்கள் உண்டு. அவன் ஓர் இளங்குமரன். அவன் அந்தக் கப்பலில் இருந்தவன் துயரத்தால் அவன் முகம் வாடியிருக்கிறது. இல்லையானால், அவன் அழகனாக விளங்குவான். தன்னுடன் வந்தவர்கள் காணாமற் போனதால், அவன் அவர்களைத் தேடி அலைகிறான்,” என்று பிராஸ்பிரோ தெரிவித்தான்.

3. உள்ளம் கலத்தல்

மக்கள் எல்லோரும் தன் தந்தையைப் போலவே முதுமை காட்டும் முகமும் நரைத்த தாடியும் உடையவர்கள் என்று மிராந்தா எண்ணியிருந்தாள். ஆகையால், அரசிளங்குமரனது அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அந்த வெற்றிடத்தில் ஓர் அழகிய நங்கையைக் கண்டதாலும், கேட்டறியாத ஒலிகளைக் கேட்டதாலும், பெர்திநந்துக்கு எல்லாம் புதுமையாக இருந்தன. தான் ஒரு மாயத் தீவில் வந்திருப்பதாகவும் அத்தீவின் தெய்வமே மிராந்தா என்றும் அவன் எண்ணினான். அந்த எண்ணத்திற்கு ஏற்பப் பேசத் தொடங்கினான்.

மிராந்தா நாணமுடையவளாய், தான் தெய்வம் அல்லள் என்றும் எளிய பெண் மகளே என்றும் கூறி, தன் வரலாற்றை எடுத்துரைக்கத் தொடங்கினாள். அப்போது பிராஸ்பிரோ அவளைத் தடுத்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போற்றிப் பாராட்டியது பிராஸ்பிரோவுக்கு மகிழ்ச்சி அளித்தது. முதன் முதலிற் கண்ட அளவிலேயே அவர்கள் காதல் கொண்டதும் அவன் அறிந்தான்; ஆயினும் பெர்திநந்தின் உறுதியைச் சோதிக்க எண்ணினான்; அதனால், சில துன்பங்களை உண்டாக்கத் துணிந்தான்.

அவ்வாறே,

பிராஸ்பிரோ, சற்று முன்சென்று ளவரசனைக் கடுமையாய்ப் பார்த்து, “நான் இத்தீவின் மன்னன்; இத்தீவினை என்னிடமிருந்து கவர எண்ணி நீ ஒற்றனாக வந்திருக்கிறாய். என் பின்னே வா. உன் கழுத்தையும் காலையும் சேர்த்துக் கட்டுவேன். நீ கடல்நீரைக் குடிக்கவேண்டும்; நண்டு முதலியவற்றையும் உலர்ந்த கிழங்குகளையும் தின்ன வேண்டும்,' என்றான். உடனே, பெர்திநந்து "முடியவே முடியாது. மிக்க