64
அப்பாத்துரையம் – 37
பெர்திநந்து அவளுடைய பெயரைக் கேட்டான். அவள் தன் பெயரைச் சொல்லிவிட்டுப் பிறகு அது தன் தந்தையின் கட்டளையை மீறி நடந்ததாகும் என்றும் கூறினாள்.
பிராஸ்பிரோவின் மந்திர வன்மையாலே தான் இவ்வளவு விரைவில் அவள் அவன் மீது காதல் கொண்டாள்; அக்காதலால் தன் கட்டளையை மீறி மிராந்தா நடந்தது பற்றி அவன் சினங் கொள்ளவில்லை; தன் மகள் முதன் முதலாக அவ்வாறு மீறி நடந்தது குறித்து அவன் புன்சிரிப்புக் கொண்டான். அப்போது பெர்திநந்து, தான் பார்த்த பெண்கள் எல்லோரையும்விட மிராந்தாவிடத்தில் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகச் சொல்லி நெடுநேரம் பேசத் தொடங்கினான். அப்பேச்சைக் கேட்டுப் பிராஸ்பிரோ மிக மகிழ்ந்தான்.
தன்னைப்போல அழகுள்ள பெண் உலக பண் உலகத்திலேயே ல்லை என்று பெர்திநந்து புகழ்ந்தபோது மிராந்தா பின்வருமாறு கூறினாள்; “எந்த ஆண் முகமும் என் நினைவில் இல்லை. உன்னையும் என் அருஐமத் தந்தையையும் தவிர வேறு ஆண்மக்களையும் நான் கண்டதில்லை. இத்தீவுக்கு வெளியே உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்வதொன்று உண்டு; அதை நம்புவாயாக! உன்னைத் தவிர இவ்வுலகத்தில் வேறு துணையை நான் விரும்பேன். எவ்வளவு எண்ணிய போதிலும் உன் அன்பான உருவம் தவிர வேறு உருவம் என் உள்ளத்தில் தோன்றவில்லை. என் தந்தையின் கட்டளையை மறந்துவிட்டு இவ்வாறு நான் அளவளாவிப் பேசுவது தவறு என்று அஞ்சுகிறேன்." என்றாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிராஸ்பிரோ புன்முறுலுடன் தலையசைத்தான், “என் விருப்பம் போல முடியும் எனத் தெரிகிறது. என் மகள் நேபல்ஸ் நாட்டு அரசியாவாள்,” என்று அவன் தந்தை மகிழ்ந்தான்போலும்.
அரசகுமாரர் அணிபெறப் பேசுதல் இயற்கைதானே! பெர்திநந்து மீண்டும் சிறந்த முறையில் பேசத் தொடங்கினான். அப்பேச்சினிடையே, தான் நேபல்ஸ் நாட்டு அரசுரிமை யுடையவன் என்றும், அவள் அந்நாட்டு அரசியாவாள் என்றும், கூறினான்.
"