சேக்சுபியர் கதைகள் - 1
73
கொடுமையால் பித்துக்கொண்டு தள்ளாடியது. கேயஸ் உருவில்
ன்வந்த கென்ட் தலைவன் இந்நிலையில் அவனைத் தன்னிடமாகிய டோவர் அரண் மனைக்குக் கொண்டுபோய் வைத்துவிட்டுக் கார்டெலியாவுக்குச் செய்தி அனுப்பினான். கார்டெலியாவைக் கண்டும் குழம்பிய மூளையால் ஒன்றும் அறிய முடியவில்லை.
இதற்குள் கானெரிலும் ரீகனும் தன் கணவரை மதியாது கிளஸ்டர் தலைவன் இளையமகன் எட்மன்ட் என்பவனைக் காதலித்தனர்.ரீகன் அவன் அண்ணனைத் துரத்திக் கிளஸ்டரின் உரிமையை அவனுக்குக் கொடுத்தாள். அதோடு தன் கணவன் தற்செயலாய் இறந்தவுடன் அவனை மணக்க முயன்றாள். இது கேட்டுப் பொறாமை கொண்ட கானெரில் அவளுக்கு நஞ்சிட அவள் கணவன் அனைத்துமறிந்து அவளைச் சிறையிட்டான். சிறையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள். இருவரும் இறந்தும் இவர்கள் ஆணையால் சென்ற படை கார்டெலியா படையை முறியடித்து அவளைச் சிறையிட அவளும் மடிந்தாள். ஆல்பனித் தலைவனே அரசுக்கட்டிலுக்கு மீந்தான்.
1. உண்மை அறியாமல் சினங்கொள்ளுதல்
6
பிரிட்டனை ஆண்ட' மன்னன் லியர் என்பவனுக்குப்பெண் மக்கள் மூவர் இருந்தனர்; மூத்தவள்? கானெரில் என்பவள்' ஆல்பனித் தலைவனை மணந்தாள். ரீகன்' என்பவள் கார்ன்வால்5 தலைவனை மணந்தாள். இளையவள் கார்டெலியாவுக்கு மணமாகவில்லை. பிரான்சு மன்னனும் பர்கண்டித்தலைவனும் அவளை மணக்க விரும்பினர்; அவ்விருப்பத்தோடு, லியர் மன்னனது அரசவைக்கு வந்திருந்தனர்.
மன்னனுக்கு வயது எண்பதுக்குமேல் ஆயிற்று. மூப்பின் காரணமாக ஏற்பட்ட தளர்ச்சியாலும், நெடுங்காலம் அரசாண்ட அயர்ச்சியாலும், அரசியலில் இனிக் கலப்பதில்லை என்றும், ஆளும் பொறுப்பை இளைஞர்பால் விடுத்து, விரைந்து வரக்கூடிய மரணத்தைக் கருதித் தன் வாழ்வை அமைதியால் ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவன் துணிந்தான். இக்கருத்தினைக் கொண்ட அவன், தன் பெண்கள் மூவரையும் அழைத்து, அவர்களுள் யார் தன்னிடம் பேரன்பு